Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM

ரஜினியின் ஆசீர்வாதத்தோடும் அவரது கட்சிக்காக தீட்டிய திட்டங்களோடும் புதிய கட்சி தொடங்குகிறார் டாக்டர் அர்ஜுனமூர்த்தி

பெங்களூரு

ரஜினியின் ஆசீர்வாதத்தோடும், அவர் தன் கட்சிக்காக தீட்டிய திட்டங்களோடும் புதிய கட்சி தொடங்குகிறேன் என்று ரஜினிக்கு நெருக்கமான டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்த போது, தன் கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக டாக்டர் ரா. அர்ஜுனமூர்த்தியை நியமித்தார். பாஜக.வில் இருந்து ரஜினி பக்கம் சென்ற இவர், ரஜினி கட்சி ஆரம்பிக்காத போதும் அவருடனே இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் ரா.அர்ஜுனமூர்த்தி புதிய கட்சி தொடங்க போவதாக நேற்று தகவல் வெளியானது.

இதுகுறித்து டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி, ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது:

ரஜினி கட்சி தொடங்குவதாக கடந்த டிசம்பரில் அறிவித்த போது என்னை ‘பொக்கிஷம்' என்று குறிப்பிட்டு அறிமுகப்படுத்தினார். அவரது உடல்நிலை காரணமாக கட்சி தொடங்காமல் போனது லட்சக்கணக்கான ரசிகர்களைப் போல எனக்கும் தீராத வருத்தம்தான். ஆனாலும் எனக்கு எப்போதும் ரஜினிதான் தலைவர்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில்திமுக, அதிமுக.வுக்கு மாற்றாக ரஜினி களமிறங்க நினைத்தார். அதற்காக ஏராளமான தொலைநோக்கு திட்டங்களோடு பல்வேறு வியூகங்களை யோசித்து வைத்திருந்தார். எனவே புதிய செயல்திட்டங்களோடும், தீர்க்கமான தொலை நோக்கு சிந்தனையோடும் அந்த மாற்றத்துக்கான பயணத்தை நான் தொடங்க இருக்கிறேன். 2021 சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க புதிய படையுடன் புதிய கட்சி தொடங்க இருக்கிறேன். என்னோடு நிறைய லட்சக்கணக்கான நல்ல சிந்தனைமிக்க இளைஞர்களும், முக்கியமான பிரபலங்களும் இருக்கின்றனர்.

ரஜினியின் கட்சிக்காக ஓராண்டுக்கு மேலாக‌ அமைத்த வியூகங்களையும், வகுத்த திட்டங்களையும் இந்த புதிய கட்சிக்கு பயன்படுத்தப் போகிறோம். ரஜினி விரும்பியபடியே திமுக, அதிமுக.வுக்கு மாற்றாக ‌234 தொகுதிகளிலும் போட்டியிட போகிறோம். ்

ரஜினியை சந்தித்து கட்சி தொடங்கும் விஷயத்தையும், என்னென்ன செய்யப் போகிறேன் என்பதையும் சொன்னேன். எல்லாவற்றையும் ஆர்வமாக கேட்ட ரஜினி, என்னை சிரித்த முகத்தோடு ஆசீர்வதித்தார். கட்சி தொடங்கினாலும்ரஜினி பெயர், படம், பாடல்களைபயன்படுத்த மாட்டேன். அவரதுசிந்தனைகளை மட்டுமே பயன்படுத்துவேன். டெல்லியில் குறைந்தகாலத்தில் ஆட்சியை பிடித்த அரவிந்த் கேஜ்ரிவாலைப் போலதமிழகத்தில் களமிறங்கி, மாற்றத்தை உருவாக்கப் போகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x