Published : 16 Dec 2020 03:14 AM
Last Updated : 16 Dec 2020 03:14 AM

போலீஸாருக்கு தகவல் கொடுத்ததாக இளைஞரை கொன்ற மாவோயிஸ்ட்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வனப்பகுதியான ஜி. மாடுகுல மண்டலம் வாக்கபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா ராவ். கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இவரது வீட்டுக்கு வந்த மாவோயிஸ்ட்கள் கிருண்ஷா ராவை அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அந்தகிராமத்தின் முக்கிய சாலைக்குஅழைத்துச்சென்று அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தகவல் அறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று கிருஷ்ணா ராவின் உடலை கைப்பற்றினர். அப்போது அங்கு மாவோயிஸ்ட்கள் விட்டுச் சென்ற கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், “வாக்கபல்லி கிராமத்தைச் சேர்ந்தபெண்கள், தங்களது ஊரைச் சேர்ந்தஒரு இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து போராடி வருகின்றனர்.ஆனால், கிருஷ்ணா ராவ் அந்தப் பெண்களை போராட்டம் செய்ய விடாமல் தடுத்து வந்தார். மேலும் போலீஸாருக்கு எங்களைப் பற்றி ரகசிய தகவல் கொடுத்து வந்தார்.

அதனால்தான் அவரை கொலை செய்தோம். இவரைப் போலவே மேலும் 4 பேர் வனப் பாதுகாப்பு பணிகளை கைவிடுவதோடு, போலீஸாரிடையே உள்ள நெருக்கத்தையும் குறைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இதே கதிதான் அந்த 4 பேருக்கும் ஏற்படும்” என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x