

மருத்துவமனைகளிலிருந்து கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று (மிதமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்) குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்தைக் கடந்தது. இதுவரை 27 லட்சத்து 13 ஆயிரத்து 933 நோயாளிகள் குணமடைந்திருக்கிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் 64 ஆயிரத்து 935 நோயாளிகள் குணமடைந்திருக்கிறார்கள். இந்தியாவில் கோவிட் நோயிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 76. 61 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது. கடந்த பல மாதங்களாக இந்த நோயிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக அதிகரித்து வருகிறது.
தற்போது நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3.55 மடங்கு அதிகமாக உள்ளது.
தற்போது நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7,65,302. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 19.5 லட்சம் (19,48,631). இவ்வாறு குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது என்பதைக் காண்பிக்கிறது. நோய் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள மொத்த நோயாளிகளில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 21.60சதவீதம் ஆகும்.
நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைபவர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்து இன்று 1.79 சதவிகிதமாக உள்ளது.