Published : 07 Jul 2020 10:28 am

Updated : 07 Jul 2020 10:28 am

 

Published : 07 Jul 2020 10:28 AM
Last Updated : 07 Jul 2020 10:28 AM

கடந்த 2 மாதங்களில் சைபர் தாக்குதல்கள், குற்றங்கள் 200 மடங்கு அதிகரிப்பு: சீனா காரணமல்ல: பிரதமர் அலுவலக அதிகாரி பேட்டி

200-increase-in-cyber-incidents-in-two-months-but-not-attributable-to-china-official
கோப்புப்படம்

மும்பை

இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் சைபர் தொடர்பான குற்றங்கள், சம்பவங்கள் 200 சதவீதம் அதிகரித்துள்ளன. ஆனால், இதற்கு சீனா காரணமல்ல என்று பிரதமர் அலுவலகத்தின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்

இபிஎஸ் பேமெண்ட் நிறுவனத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் அலுவலகத்தின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி குல்ஷன் ராய் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த இரு மாதங்களாக இந்தியாவில் சைபர் தொடர்பான சம்பவங்கள், குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு நாம் சீனாவையும் குறை சொல்ல முடியாது, அதேசமயம், கரோனா வைரஸாஸ் வீட்டிலிருந்தே கணினி மூலம் பணியாற்றும் சூழல் அதிகரித்துள்ளதையும் குறை சொல்ல முடியாது. கணினி மூலம் பணியாற்றுவோர் எந்தவிதமான பாதுகாப்பு வழிமுறையும் இன்றி, தேவையற்ற, பாதுகாப்பில்லா செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதே காரணமாகும்.

குல்ஷன் ராய் : கோப்புப்படம்

கடந்த இரு மாதங்களாக சைபர் தொடர்பான குற்றங்களான ஹேக்கிங் செய்தல், கணக்கிலிருந்து பணத்தை திருடுதல், விவரங்களைத் திருடுதல் போன்ற பல்வேறு சைபர் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளன என்ற புள்ளிவிவரங்களும் இருக்கின்றன.

ஆனால், சைபர் குற்றங்கள், சைபர் தாக்குதல்கள் 200 சதவீதம் அதிகரித்தற்கும், இந்தியா, சீனா எல்லையில் நடந்த மோதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அதற்கான ஆதாரங்களும்இல்லை. கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி, பிப்ரவரி மாதத்திலிருந்து ஏராளமானோர் வீட்டில் இருந்து பணி செய்யும் கலாச்சாரம் அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்துதான் இதுபோன்ற சைபர் குற்றங்களும், தாக்குதல்களும் அதிகரி்தத்து வருகின்றன

இந்த அனைத்து சைபர் சம்பவங்களையும், குற்றங்களையும் மத்திய அரசின் தனிப்பட்டஅமைப்பு தொடர்ந்து கண்காணித்தும், தடுத்தும் வருகிறது.

வீட்டில் இருந்து பணியாற்றுவோர் தேவையான அளவு சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பணியாற்ற வேண்டும். குறிப்பாக தங்களுக்கு தேவையான ஆவணங்கள், செயலிகளை பதவிறக்கம் செய்யும் போது மிகவும் கவனத்துடன், அங்கீகரிக்கப்பட்ட செயலிகளை மட்டுமே பதவிறக்கம் செய்ய வேண்டும்.

உற்பத்தித் துறையில் உலகில் முன்னணி நாடாக இருந்து வருவது சீனா, ஒவ்வொருவரும் சீனப் பொருட்களை வாங்குகிறோம், பயன்படுத்துகிறோம். பிரதமர் மோடி, அதனால்தான் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நாடு நகர வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். மற்ற அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் சீனாவின் பொருட்களை சார்ந்திருப்பதிலிருந்து விலகி இருக்க வேண்டும் எனும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன

அடுத்த இரு ஆண்டுகளில் தற்சார்பு பொருளாதாரத்தில் நல்ல மாற்றத்தை நாம் உணரலாம். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் தங்களை சீனாவின் சார்பிலிருந்து விடுவித்துக் கொள்வார்கள். சீன அமைப்புகளின் தவறான பயன்பாடு அல்லது தவறாக செயல்படுவதைத் தடுக்க நாங்கள் நடவடிக்கை எடுப்பது அவசியம் அதற்கான வழிமுறைகள் உள்ளன.

நாள்தோறும் தொழில்நுட்பங்கள் மாறிவரும் சூழலில், இந்த சைபர் தாக்குதலில் இருந்து வங்கிகளைக் காக்க வங்கி முழுமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் சைபர் செக்யூரிட்டி முறையை புதிதாக அறிமுகப்படுத்துவது அவசியம்.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், மின்நிலையங்கள் போன்றவை பெரும்பாலும் பரந்த இணையவழித்தொடர்பால் இணைக்கப்படவில்லை. இதுபெரும் நிம்மதியளிக்கும் விஷயமாகும். ஆனால், ஒருவேளை அவ்வாறு முழுமையாக இணையத்தால் இணைக்கப்படும் போது, அதற்கு சிறந்த பாதுகாப்பு முறை அவசியம்

இவ்வாறு ராய் தெரிவித்தார்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

200% increase in cyber incidentsCyber incidents in two monthsAttributable to ChinaChief information security officerCyber incidents in Indiaசைபர் செக்யூரிட்டி பாதுகாப்பு அதிகாரிசீனா காரணமல்ல200 மடங்கு சைபர் குற்றங்கள் அதிகரிப்புவீட்டிலிருந்தே பணிபுரியும் கலாச்சாரம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author