Published : 04 Aug 2015 09:57 AM
Last Updated : 04 Aug 2015 09:57 AM

கடந்த ஆண்டு ரயில் விபத்துகளில் 27,581 பேர் பலி

கடந்த 2014ம் ஆண்டில், ரயில் விபத்துகளால் நாடு முழுக்க 27,581 பேர் பலியாகி உள்ளதாக தேசிய குற்றப் பதிவு காப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்துகள், ரயில் விபத்து மற்றும் ரயில்வே கிராசிங் விபத்துகள் என்று இரு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ரயில்கள் நேருக்கு நேராக மோதியது மற்றும் ரயிலில் இருந்து விழுந்தது ஆகிய காரணங்களால் 13,542 பேர் பலியாகியுள்ளர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகளவில் ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 7,969 விபத்துகளில் 5,024 பேர் பலியானதுடன் 3,208 பேர் காயமடைந்துள்ளனர்.

எனினும், 2013ம் ஆண்டை விட கடந்த ஆண்டு ரயில் விபத்துகள் 9.2 சதவீதம் குறைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான விபத்துகள் ஜூன் மாதத்தில்தான் நடைபெற்றுள்ளன. 17.5 சதவீதம் விபத்துகள் காலை 6 மணி முதல் 9 மணி வரை நிகழ்ந்திருக்கின்றன.

கடந்த ஆண்டு 2,547 ரயில்வே கிராசிங் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த விபத்துகளால் 2,575 பேர் பலியானதுடன் 126 பேர் காயமடைந்துள்ளனர். 2013ம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டு ரயில்வே கிராசிங் விபத்துகள் 83.5 சதவீதமாக அதிகரித்துள்ளன.

இந்த வகை விபத்துகள் தெலங்கானாவில்தான் அதிகளவில் நிகழ்ந்துள்ளன. அங்கு 1,061 ரயில்வே கிராசிங் விபத்துகள் கடந்த ஆண்டு நிகழ்ந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x