Last Updated : 27 Apr, 2020 05:38 PM

 

Published : 27 Apr 2020 05:38 PM
Last Updated : 27 Apr 2020 05:38 PM

கரோனா இல்லாத மாநிலம்: முகக்கவசம் இல்லாவிட்டால் பெட்ரோல் இல்லை; அருணாச்சலப் பிரதேச அரசு அதிரடி உத்தரவு

படம் உதவி ட்விட்டர்.

இட்டாநகர்

தலைநகர் இட்டா நகரில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் வருவோருக்கு பெட்ரோல், டீசல் வழங்கக் கூடாது என்று அருணாச்சலப் பிரதேச அரசு அனைத்து முகவர்களுக்கும் இன்று உத்தரவிட்டுள்ளது.

நாட்டிலேயே கரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக அருணாச்சலப் பிரதேச மாநிலம் இருந்தாலும் வரும் காலத்தில் பாதிப்பு வராமல் தடுக்க தீவிர நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

கரோனா வைரஸ் நாட்டில் தீவிரமடைந்துள்ளது. இதுவரை 27,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 872 பேர் உயிரழந்துள்ளனர். கரோனாவைக் கட்டுக்குள் வைக்க மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என தொடர்ந்து அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் கரோனாவின் பாதிப்பு தொடர்ந்து வருகிறது.

இதில் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் இதுவரை கரோனாவுக்கு ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டு அவரும் குணமடைந்துள்ளார். யாரும் புதிதாக பாதிக்கப்படாததால், கரோனா இல்லாத மாநிலமாக அருணாச்சலப் பிரதேசம் இருந்து வருகிறது. இருப்பினும் கரோனா பாதிப்பு வராமல் தடுப்பதற்காக புதிய உத்தரவை அருணாச்சலப் பிரதேச அரசு பிறப்பித்துள்ளது.

அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா கண்ட்.

அதன்படி தலைநகர் இட்டா நகரில் முகக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் வருவோருக்கு பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது எனத அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உணவு மற்றும் சிவில் சப்ளை அதிகாரி அமித் பெங்கியா இன்று அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கும் அனுப்பிய நோட்டீஸில், ''தலைநகரில் வாழும் மக்கள் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக வாழ அரசு விரும்புகிறது. ஆதலால், முகக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் வரும் வாடிக்கையாளருக்கு பெட்ரோல், டீசல் வழங்கkகூடாது. எல்பிஜி எரிவாயுவும் நிரப்பாதீர்கள்” என உத்தரவி்ட்டுள்ளார்.

முதல்வர் பெமா கண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில், “முகக்கவசம் இல்லையென்றால், பெட்ரோல், டீசல் இல்லை. இட்டா நகரில் அமலுக்கு வந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் அமைப்பின் தலைவர் அருண் கிபா லோராம் கூறுகையில், “அனைத்து பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கும் போதுமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பணிநேரத்தில் எந்தவிதமான அசட்டையும் இருக்கக்கூடாது. முகக்கவசம் இல்லாமல் யாருக்கும் பெட்ரோல் வழங்காதீர்கள்” எனத் தெரிவித்துவிட்டோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x