Published : 18 Apr 2020 06:28 AM
Last Updated : 18 Apr 2020 06:28 AM

சரியான பாதையில் இந்தியா- உலக சுகாதார அமைப்பு கருத்து

டெல்லி அருகே நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு பென்னட் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இந்த பல்கலைக்கழகம் சார்பில், கரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக சர்வதேச அளவில் ஆன்லைனில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் உலக சுகாதார அமைப்பின் அவசர கால பிரிவின் தலைவர் டாலே பிஷ்னர் பேசியதாவது:

கரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில்ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கை உடனடியாக விலக்கிக் கொள்வது ஆபத்தானது. படிப்படியாகவே ஊரடங்கை வாபஸ் பெற வேண்டும். அந்த வகையில் இந்தியா மிகச் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகும் மக்கள்சமூக இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய அரசின் அறிவியல் முதன்மை ஆலோசகர் விஜயராகவன் கூறும்போது, "கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களை டிஜிட்டல் முறையில் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் கரோனா வைரஸ் மற்றவர்களுக்கு தொற்றாமல் தடுக்க முடியும்" என்று தெரிவித்தார்.

பயோகான் லிமிடெட் நிறுவன செயல் தலைவர் கிரண் மஜும்தார் ஷா பேசும்போது, "வைரஸ் பரிசோதனை கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x