Last Updated : 19 Aug, 2015 02:30 PM

 

Published : 19 Aug 2015 02:30 PM
Last Updated : 19 Aug 2015 02:30 PM

நால்வர் பலாத்காரம் நடைமுறை சாத்தியமற்றது: முலாயம் சர்ச்சைக் கருத்து

“பலாத்கார சம்பவத்தில் ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தால், 4 பேர் மீது வழக்கு பதிவு செய்கின்றனர். இது நடைமுறைக்கு சாத்தியமில்லை” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில், சட்டம் ஒழுங்கு தொடர்பான நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஆளும் சமாஜ் வாதி கட்சியின் தேசிய தலைவர் முலாயம் சிங் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

பலாத்கார சம்பவத்தில் ஒருவர் ஈடுபட்டிருப்பார். ஆனால், கூடுத லாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்கின்றனர். உதாரணமாக 4 சகோதரர்களில் ஒருவர் பலாத் காரத்தில் ஈடுபட்டிருக்கலாம். மற்றவர்கள் அங்கு இருந்திருக் கலாம். ஆனால், எல்லோர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய் கின்றனர். கூட்டு பலாத்காரம் என் பது நடைமுறைக்கு சாத்தியமில் லாத ஒன்று. பலாத்கார குற்றங் களில் அப்பாவிகள் யாரையும் சித்திரவதை செய்யக்கூடாது.

மேலும், பதான் பகுதியில் சகோதரிகள் 2 பேரை பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டதாக கூறினர். ஆனால் சிபிஐ விசாரணையில், அந்த சகோதரிகள் பலாத்காரம் செய்யப்படவில்லை, சொத்துக்காக உறவினர்களே கொலை செய்தது தெரிய வந்தது.

ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி போன்ற மூத்த தலைவர்கள் கூட உ.பி.யில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக குற்றம் சுமத்துகின்றனர்.

நாட்டில் பலாத்கார சம்பவங் கள் மற்ற மாநிலங்களில் அதிக மாக நடக்கின்றன. ஆனால், என் மகன் அகிலேஷ் யாதவ் முதல் வராக இருக்கும் உ.பி.யில்தான் பலாத்காரங்கள் மிகவும் குறைவு. ஆனால், உத்தரப் பிரதேச அரசை தான் அதிகமாக விமர்சிக்கின்றனர்.

இவ்வாறு முலாயம் சிங் யாதவ் பேசினார்.

முலாயமின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டு பலாத்கார வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் முலாயம். அப்போது அவர் கூறும்போது, “பையன்கள் பையன்கள்தான். அவர்கள் தவறு செய்ய கூடிய வர்கள்” என்றுதான் பலாத்காரம் பற்றி பேசினார். இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலை யில், மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் விஜய் பகதூர் பதக் கூறும்போது, “முலாயமின் கருத்து பெண்களை அவமானப்படுத்து வதாக உள்ளது. கூட்டு பலாத்கார வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை அவர் கேள்விக்குறியாக்கி உள்ளார்” என்றார்.

காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் திவ்ஜேந்திர திரிபாதி கூறும்போது “முலாயம் சிங் யாதவ், பெண்களை மதிக்கவில்லை என்பதுதான் அவருடைய பேச்சு எதிரொலிக்கிறது. இதுபோல் கருத்து தெரிவிப்பதற்கு பதில், பெண்களுக்கு எதிரான குற்றங் களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும்படி முதல்வராக உள்ள தனது மகன் அகிலேஷிடம் முலா யம் வலியுறுத்தலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x