Published : 30 Mar 2020 06:54 am

Updated : 30 Mar 2020 06:54 am

 

Published : 30 Mar 2020 06:54 AM
Last Updated : 30 Mar 2020 06:54 AM

வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதைத் தடுக்க அனைத்து மாநில எல்லைகளையும் மூடவேண்டும்: மத்திய அரசு புதிய உத்தரவு

close-all-state-borders
வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஊர் திரும்புவதற்கு வசதியாக டெல்லி ஆனந்த் விஹார் பஸ் நிலையத்தில் நேற்று பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. பஸ்களில் ஏறுவதற்காக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டனர். படம்: ஏஎப்பி

புதுடெல்லி

வெளிமாநிலங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதை தடுக்க அனைத்து மாநில, யூனியன் பிரதேச எல்லைகளையும் மூட வேண்டும் என்று மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்து உள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் நேற்று வரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். சீனா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், ஈரான் ஆகிய நாடுகளில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் நேற்று வரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளி அவசியம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழு வதும் மக்கள் ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழு வதும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத் தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊர டங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள் ளது. மளிகைப் பொருட்கள், காய் கறி, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட் டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் தலைநகர் டெல்லி, வர்த்தக தலை நகரம் மும்பை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் வெளிமாநிலங் களில் இருந்து வந்து பணியாற் றும் தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

பல மாநிலங்களில் அவர்கள் உள்ளூர் போக்குவரத்தை பயன் படுத்திக் கொள்வதுடன் சிலர் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக் குச் செல்கின்றனர். இவ்வாறு பல ரும் தங்கள் சொந்த ஊர்களை சென்று சேர்ந்து வருகின்றனர். இவர் கள் கிராமங்கள் மற்றும் சிறுநகரங் களுக்கு திரும்பி வரும்வேளையில் அங்கும் கரோனா வைரஸ் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதைத் தடுக்கும் விதமாக அனைத்து யூனியன் பிரதேசம், மாநில எல்லைகளையும் மூடுமாறு மத்திய அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தொழிலாளர்கள் பணியாற்றும் பகுதிகளிலேயே தங்கி இருக்க அவர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அவர்களுக்குத் தேவையான உணவு, இருப்பிடம் ஆகியவற்றை ஏற்படுத்தித் தருமாறு மாநில, யூனியன் பிரதேச அரசு களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அமைச் சரவை செயலர் ராஜீவ் கவுபா, மத்திய உள்துறை அமைச்சக செய லர் அஜய் பல்லா ஆகியோர் அனைத்து மாநில தலைமைச் செய லர்கள், போலீஸ் டிஜிபிக்களுடன் வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் நேற்று ஆலோசனை நடத் தினர். ஆலோசனைக் கூட்டத் துக்குப் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நகரங்கள், நெடுஞ்சாலைகள், எல்லைப் பகுதிகளில் மக்கள் நடமாட்டமே இருக்கக்கூடாது என் றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. இந்த உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட போலீஸ் கண் காணிப்பாளர்கள் கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்றும் உத்தர விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கரோனா வைரஸ்நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 6 பேர் இறந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் கூறும்போது, “இதுவரை நாடு முழுவதும் 1,024 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 27 பேர் இறந் துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 100-க்கும்மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது” என்றார்.

இந்திய மருத்துவக் ஆராய்ச்சிக் கவுன்சிலை (ஐசிஎம்ஆர்) சேர்ந்த ஆர். கங்கா கேட்கர் கூறும்போது, “இதுவரை நாடு முழுவதிலும் இருந்து சேகரிக்கப்பட்ட 34,931 ரத்த மாதிரிகளை சோதனை செய்துள்ளோம். ஐசிஎம்ஆர் நடத் தும் 113 ஆய்வகங்களில் சோதனை நடத்தப்படுகிறது. அதைப் போலவே கரோனா வைரஸ் தொற்று உள் ளதா என சோதனை நடத்த 47 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது” என்றார்.

மத்திய உள்துறை அமைச்சக இணையச் செயலர் புண்யா சலிலா வஸ்தவா கூறும்போது, “ஊர டங்கு உத்தரவால் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முழு ஊதி யமும் வழங்கப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாத வாடகையை வசூலிக்கக் கூடாது என்றும் வீட்டு உரிமையாளர் களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பணிபுரியும் தொழிலாளர் கள் தங்கியிருக்கும் இடத்தை விட்டு வெளியேறுமாறு வற் புறுத்தக்கூடாது. இந்த உத்த ரவுகள் சரிவரப் பின்பற்றப்படு கிறதா என்பதை மாவட்ட ஆட்சி யர்கள், மாவட்ட போலீஸ் கண் காணிப்பாளர்கள் கண் காணிக்கவேண்டும்” என்றார்.

உயர்நிலைக் குழுக்கள்

இதனிடையே, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வர 10 உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை சீராக்கவும், பொதுமக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குகொண்டு வரவும் இந்த உயர்நிலைக்குழுக்கள் நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பிரதமரின் முதன்மைச்செயலர் பி.கே. மிஸ்ராவின் ஒட்டுமொத்த வழிகாட்டுதலின் பேரில் இந்தக் குழுக்கள் செயல்படும் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மத்திய ஆயு தப் படை போலீஸ் (சிஏபிஎப்) பிரிவில் புதிதாக சேர்ந்த 450 டாக்டர்கள் உடனே பணியில் சேருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மீறினால் 14 நாட்கள் தனிமை முகாம்

வேலை தேடி வெளிமாநிலங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாததால் அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். இதை தடுக்க, அவர்கள் வேலை செய்யும் மாநிலங்களில் வேண்டிய அத்தியாவசிய வசதிகளை ஏற்பாடு செய்து தருமாறு மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான உணவு,இருப்பிடம் ஆகியவற்றை ஏற்படுத்தித் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (எஸ்டிஆர்எப்) தேவையான நிதியை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில், வெளிமாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், உத்தரவை மீறி வெளியே வந்தால் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி முகாமில் வைக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


வெளிமாநிலத் தொழிலாளர்கள்மத்திய அரசு புதிய உத்தரவுமாநில எல்லைகளை மூடவேண்டும்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x