Published : 29 Mar 2020 17:51 pm

Updated : 29 Mar 2020 17:51 pm

 

Published : 29 Mar 2020 05:51 PM
Last Updated : 29 Mar 2020 05:51 PM

24 மணிநேரத்தில் 6 மாநிலங்களில் 6 உயிரிழப்புகள்; 106 கரோனா நோயாளிகள்: சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

106-new-covid-19-cases-six-deaths-reported-from-six-states-in-last-24-hours-health-ministry
மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த காட்சி | படம்: ஏஎன்ஐ.

புதுடெல்லி

கடந்த 24 மணிநேரத்தில் 6 மாநிலங்களில் 106 பேர் கரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறுகையில், “ இந்தியாவில் மொத்தம் 979 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 பேர் மரணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 6 மநிலங்களில் இருந்து 106 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 21 நாட்கள் லாக்-டவுன் காலத்தில் மக்களில் மனரீதியான பிரச்சினை, அழுத்தம் ஏற்பட்டால் 08046110007 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து ஆலோசனை பெறலாம்” எனத் தெரிவித்தார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் ஆர்.கங்கா கேட்கர்

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் ஆர்.கங்கா கேட்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ இன்றுவரை ஐசிஎம்ஆர் சார்பில் 34 ஆயிரத்து 931 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இது ஐசிஎம்ஆர் திறனில் 30 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் இன்னும் ஆய்வுக்கூடங்களை அதிகப்படுத்தி இருக்கிறோம். 113 ஆய்வுக்கூடங்களில் 47 ஆய்வுக்கூடங்கள் தனியார் மூலம் நடத்தப்படுபவை. அவற்றிலும் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “லாக்-டவுன் நாட்களில் வேலைக்கு வராத ஊழியர்களின் ஊதியத்தைப் பிடிக்காமல் முழுமையான ஊதியத்தை வழங்க நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். இந்த காலகட்டத்தில் நில உரிமையாளர்கள், வாடகைதாரர்கள் வாடகை வசூலிக்கக் கூடாது.

அதேபோல வேலையாட்களை இடத்தை விட்டுச் செல்லுங்கள் என்றும் கட்டாயப்படுத்தக் கூடாது. இதைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டியது மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியரின் பொறுப்பாகும். அனைத்து மாநில எல்லைகளையும் மூடவும் உத்தரவிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

106 new COVID-19 casesSix deathsSix states in last 24 hours:The health ministryLast 24 hours.6 மாநிலங்கள்24 மணிநேரத்தில் 6 உயிரிழப்பு106 பேர் கரோனாவால் பாதிப்புகரோனா வைரஸ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author