Published : 30 May 2014 09:24 AM
Last Updated : 30 May 2014 09:24 AM

ஒரு ராஜா மந்திரி ஆனார்

ஆந்திராவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த அஷோக் கஜபதி ராஜு, வியாழக்கிழமை நரேந்திர மோடி அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக (மந்திரி) பொறுப்பேற் றுக் கொண்டார்.

மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சராகி உள்ள இவர், தெலுங்கு தேசம் கட்சியின் விஜயநகர மக்களவை தொகுதி உறுப்பினராவார். இவர், 7 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் 2 முறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 36 ஆண்டு அரசியல் அனுபவம் மிக்க இவரது வம்சாவளியினர், விஜயநகர அரச குடும்பத்தைச் சேர்ந்தவராவர்.

ஆந்திராவில் புசபடி ராஜ வம்சத்தினர் மிகவும் பிரபலமா னவர்கள். கி.பி. 626-ம் ஆண்டு முதல் கி.பி. 1509-ம் ஆண்டு வரை பெஜவாடாவை ஆண்டனர். பெஜவாடாதான் தற்போது விஜய வாடா என அழைக்கப்படுகிறது. இவர்களது மூதாதையர்கள்தான் கிருஷ்ணா நதிக்கரையில் பெஜ வாடாவை உருவாக் கினார்கள். பின்னர் கடலோரத்தில் உள்ள விஜயநகரத்திற்கு தங்களது முகாமை மாற்றி அமைத்து ஹம்பியை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர்.

கி.பி. 1515-ல் புசபடி ராச்சராஜு, ஒரிசா பேரரசர் கஜபதியுடன் இணைந்து, விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் மீது போர் தொடுத்து தோல்வி அடைந்தார். பிறகு ராயருடன் சமாதானம் செய்துகொண்டு, புசபடி ராச்சராஜு மற்றும் கிருஷ்ண தேவராயர் ஆகியோர் கஜபதியின் மகள்களை திருமணம் செய்து கொண்டனர்.

முகலாய சக்ரவர்த்தி ஒளரங்க சீப், 1652-ல் கோல்கொண்டா மீது போர் தொடுத்தபோது, சீதா ராம ராஜு (1685-97) ஒத்துழைத் ததற்காக இவருக்கு இரு பக்க கூர்மை கொண்ட வாளை பரிசாக வழங்கி உள்ளார். இதுவே பின்னர் இவர்களது கொடி சின்னமும் ராஜ முத்திரையுமானது.

புசபடி பெத்த விஜயராம ராஜு (1710-57) பொப்புலி போரில் வீர மரணமடைந்தார். இவரைத் தொடர்ந்து, புசபடி ஆனந்த ராஜு (1760) விசாகப்பட்டினம், ராஜமுந்திரி போன்ற இடங்களைக் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து புசபடி வம்சாவளியினர் தொடக்கத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போர் புரிந்து, பின்னர் தங்களது ராஜ்ஜி யங்களை அவர்களுக்கு எழுதி கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.

16-ம் நூற்றாண்டு முதல் இவர்களது பெயர்களில் ‘கஜபதி’ எனும் துணைப்பெயரை உபயோ கிக்கத் தொடங்கி உள்ளனர். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இவர்கள் ‘சுபேதார்’ கள் என்று அழைக்கப்பட்டனர். 1827-ல் மகாராஜா விஜய ராம ராஜுவுக்கு ஆங்கிலேயர்கள் பல விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளனர்.

தற்போதைய மத்திய அமைச்சர் அஷோக் கஜபதி ராஜுவின் மூதாதையர்கள் அரச பரம்பரை யைச் சேர்ந்தவர்கள் என வரலாறு தெரிவிக்கிறது. இவரது தந்தை புசபடி விஜயராம கஜபதிராஜு முன்னாள் எம்.பி. ஆவார். இவரது நெருங்கிய உறவினர் புசபடி எஸ்.குமாரசுவாமி ராஜா, மதராஸ் பிரசிடென்ஸி இருந்தபோது (1949-52) முதல்வராக பணியாற்றி உள்ளார். பின்னர் இவர் ஒரிசா மாநில ஆளுநராகவும் (1954-56) பணிபுரித்துள்ளார்.

அஷோக் கஜபதி ராஜு குடும்பத்தினருக்கு விஜயநகர மக்களும் ஒரு அரசருக்கு வழங்கும் மரியாதையைத்தான் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

மொத்தத்தில் ஒரு ராஜா மந்திரி ஆனார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x