Last Updated : 15 Mar, 2020 05:50 PM

 

Published : 15 Mar 2020 05:50 PM
Last Updated : 15 Mar 2020 05:50 PM

முதல்முறையாக ஏற்பாடு: வீரமரணம் அடைந்த 2,200 வீரர்களின் குடும்பத்தினரின் மருத்துவக் காப்பீடு பிரிமியம் தொகையை சிஆர்பிஎப் செலுத்தும்

தீவிரவாத, மாவோயிஸ்ட் தாக்குதலில் வீர மரணம் அடைந்த 2,200 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினருக்குச் செலுத்த வேண்டிய முழுமையான மருத்துவக் காப்பீட்டை சிஆர்பிஎப் அமைப்பே செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது

முதல்முறையாக இந்த நடவடிக்கையை சிஆர்பிஎப் அமைப்பு வீரர்களின் குடும்பத்தினரின் நலன் கருதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய படை அமைப்பான துணை ராணுவப்படையில் மொத்தம் 3.25 லட்சம் வீரர்கள் பல்வேறு பிரிவுகளில், தரத்தில் பணியாற்றி வருகின்றனர்.

வரும் 19-ம் தேதி சிஆர்பிஎப் படையின் 81-வது ஆண்டு தொடக்கவிழா நடக்கிறது. அதையொட்டி, வீர மரணம் அடைந்த 2200 வீரர்களின் குடும்பத்தினரின் சுகாதாரக் காப்பீடு திட்டத்தில் ப்ரீமியம் தொகை அனைத்தையும் அந்த படைப்பிரிவே செலுத்த உள்ளது. இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.

இதுகுறித்து சிஆர்பிஎப் படைப் பிரிவின் இயக்குநர் ஏ.பி. மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், " எங்கள் படைப்பிரிவில் வீர மரணம் அடைந்த வீரர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களின் குடும்பத்தினரின் முழுமையான சுகாதாரக் காப்பீட்டை நாங்களே வழங்குகிறோம். அந்த காப்பீட்டுக்கான முழுமையான ப்ரிமியம் தொகையை சிஆர்பிஎப் படைப்பிரிவு செலுத்தும். அதற்கான நிதியை நலநிதியிலிருந்து பெறுவோம்.

இதுவரை 2,200 வீரர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பணியின் போது வீரமரணம் அடைந்துள்ளார்கள். அவர்களின் குடும்பத்தினர் நல்ல மருத்துவ வசதியைப்பெறும் நோக்கில் இது செய்யப்படுகிறது

இப்போதுவரை மருத்துவக் காப்பீட்டை அந்தந்த குடும்பத்தினர்தான் செலுத்தி வருகிறார்கள். இனிமேல் அவர்கள் செலுத்தத் தேவையில்லை. இதன் மூலம் ஒரு வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.30 ஆயிரம் வாழ்நாள் காப்பீடாகச் செலுத்தப்படும். அதிகாரிகள் அளவில் இருந்து உயிர்நீத்தோரின் குடும்பத்தினருக்கு வாழ்நாள் ப்ரீமியமாக ரூ.1.20 லட்சம் செலுத்தப்படும்." எனத் தெரிவித்தார்

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் படையின் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினருக்கும் முழுமையாகக் காப்பீடு வழங்கப்பட்டது. அப்போதுதான், இதுபோல் வீரமரணம் அடைந்த அனைத்து வீரர்களின் குடும்பத்தினருக்கும் வாழ்நாள் காப்பீட்டுத் தொகையைச் செலுத்தக்கூடாது என்ற எண்ணம் சிஆர்பிஎப் படைப்பிரிவுக்குத் தோன்றி இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x