‘நோ’ யெஸ் பேங்க்’ - மோடி பொருளாதாரத்தை நாசம் செய்து விட்டார்: ராகுல் காந்தி தாக்கு

‘நோ’ யெஸ் பேங்க்’ - மோடி பொருளாதாரத்தை நாசம் செய்து விட்டார்: ராகுல் காந்தி தாக்கு
Updated on
1 min read

நிதிநெருக்கடியில் சிக்கிய எஸ் வங்கியை மத்திய ரிசர்வ் வங்கி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 3ம் தேதி வரை ரூ.50,000 மட்டுமே யெஸ் வங்கியிலிருந்து எடுக்க முடியும் என்று கெடுபிடி விதித்ததையடுத்து ராகுல் காந்தி மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.

இது தொடர்பாக தன் ட்விட்டரில் அவர் , “நோ யெஸ் பேங்க். மோடி மற்றும் அவரது யோசனைகள் அனைத்தும் இந்தியப் பொருளாதாரத்தை நாசம் செய்து விட்டது.” என்று பதிவிட்டுள்ளார்

ரிசர்வ் வங்கி எஸ் வங்கியின் கட்டுப்பாட்டை தனக்குக் கீழ் கொண்டு வந்ததையடுத்து எந்த ஒரு கடனையும் அது புதுப்பிக்க முடியாது, லோன் வழங்க முடியாது, முதலீடு செய்ய முடியாது 30 நாட்கள் தடை காலக்கட்டத்தில் எந்த ஒரு செலவையும் தொகை அளித்தலையும் எஸ் வங்கியினால் செய்ய முடியாது.

அடுத்த ஏப்ரல் 3ம் தேதிவரை எஸ் வங்கி முன்னாள் ஸ்டேட் வங்கியின் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமாரின் வழிகாட்டுதலில் செயல்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in