Last Updated : 15 Aug, 2015 10:43 AM

 

Published : 15 Aug 2015 10:43 AM
Last Updated : 15 Aug 2015 10:43 AM

போலீஸாரிடம் சிக்கிய புராதன குர்ஆன்: ஆவணக் காப்பகத்தில் திருடப்பட்டு இருக்கலாம் - ஆய்வாளர்கள் சந்தேகம்

சுமார் 400 ஆண்டுகள் பழமையான‌ குர்ஆன் புத்தகம் ஒன்றை ரூ. 5 கோடிக்கு விற்க முயன்ற கும்பலை மைசூருவில் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற‌னர். இந்நிலையில் இந்த குர்ஆன் பழமையான நூலகங்கள், அரசு ஆவணக் காப்பகங்களில் இருந்து திருடப்பட்டு இருக்கலாம் என சந்தேகிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முகலாயர் ஆட்சிக்காலத்தில் தங்க முலாமிட்ட தாளில் எழுதப் பட்ட‌ குர்ஆன் புத்தகம் ஒன்றை ரூ.5 கோடிக்கு விற்க முயன்ற 10 பேர் மைசூருவில் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் பெங்களூரு, மங்களூரு, பீஜாப்பூர், ரெய்ச்சூர், ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

முதல் கட்ட விசாரணையில், குற்றவாளிகள் அனைவரும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் என்றும், அதில் 6 பேர் பட்டப் படிப்பு படித்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இந்த கும்ப லுக்கு பழமை வாய்ந்த குர்ஆன் எப்படி கிடைத்தது, இதே போன்ற குற்றங்களில் முன்னர் ஈடுபட்டுள்ள னரா, இதன் பின்னணியில் சர்வதேச கும்பலின் சதி இருக்கிறா எனப் பல‌ கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்தப் பழமையான குர்ஆன் புத்தகம் ஹைதராபாத் அரசு ஆவணக் காப்பகத்தில் இருந்தோ, பழமையான நூலகங்களில் இருந்தோ திருடப்பட்டு இருக்க லாம் என வரலாற்றியல் ஆய் வாளர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். எனவே மைசூரு போலீஸார் ஹைதராபாத்துக்கு சென்று, விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மீர் கவுஸ் மொய்தீன், `தி இந்து'விடம் கூறியதாவது:

மைசூருவில் கைப்பற்றப் பட்டுள்ள பழமையான குர்ஆன் புத்தகத்தை இஸ்லாமியர்களின் புனித நூலாக மட்டும் சுருக்கி பார்க்கக் கூடாது. நம் நாட்டின் பெருமைமிகு பொக்கிஷங்களில் ஒன்று. இத்தகைய அரிய ஆவணங்களை அரசு மட்டு மல்லாமல் தனி நபரும் பாதுகாக்க வேண்டும்.

ஆனால் தொடர்ச்சியாக குர்ஆன் உள்ளிட்ட அரிய பொக்கிஷங்கள் கடத்தப்பட்டு விற்கப்படுவது வேதனையானது.

நபிகள் நாயகத்தின் காலத் துக்கு பிறகு, 4-வது ஹஜ்ரத் அலி காலத்தில் அதாவது கி.பி. 7-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குர்ஆன் அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இருக்கிறது. இங்குள்ள மவுலான அபுல் கலாம் ஆசாத் ஆவணக் காப்பகத்தில் இருந்த இந்த அரிய குர்ஆன் புத்தகம் 1960-களில் காணாமல் போனது.

அதனை போலீஸார் நாடு முழுவதும் தேடியபோது, மும்பை யைச் சேர்ந்த ஒரு கும்பல் அதனை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பிறகு அது மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இங்கு மட்டுமல்லாமல் உத்தரப் பிரதேசம் ராம்பூரில் உள்ள‌ ரசால் நூலகம், பாட்னாவில் உள்ள குதா பஷ்க் நூலகம், ஹைதராபாத்தில் உள்ள சலார் ஜங் நூலகம் உள்ளிட்ட இடங்களில் பழமையான குர்ஆன் புத்தகங்களும், முகலாய பேரரசின் பெருமைகளை பறைசாற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களும் பாதுகாப்பாக இருக்கின்றன.

அவற்றை முறையாக பாதுகாப்பதில் சிக்கல் இருப்பதால் அவ்வப்போது திருடு போகும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன‌. இங்கு மட்டும‌ல்லாமல் ரஷ்யா வின் தலைநகரான மாஸ்கோவில் உள்ள ஆவணக் காப்பகத்தில் இருந்தும் பழமையான குர்ஆன் புத்தகங்கள் களவு போய் இருக்கின்றன" என வேதனையுடன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x