Published : 29 Dec 2019 08:29 AM
Last Updated : 29 Dec 2019 08:29 AM

ஒடிசாவில் அரசு தோட்டக்காரருக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துகள்

ஒடிசா மாநில அரசில் தோட்டக்காரராக பணிபுரியும் ஒருவருக்கு ரூ.1 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் தெரியவந்துள்ளது.

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டம், உடாலா பகுதியில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலம் உள்ளது. இங்கு தோட்டக்காரர் மற்றும் தோட்டக்கலை விரிவாக்கப் பணியாளராக பணியாற்றி வந்தவர் உதப் பெஹரா. இவர் வருவாய் ஆதாரங்களுக்கு பொருந்தாத வகையில் சொத்துகளை குவித்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் இவரது வீட்டை சோதனையிட்டனர். மயூர்பஞ்ச் மற்றும் பாலேஷ்வர் மாவட்டத்தில் உள்ள அவரது உறவினர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இதில் உதப் பெஹராவுக்கு சொந்தமாக 3 மாடி வீடு, 12 வீட்டு மனைகள், கோழிப் பண்ணை, 3 இருசக்கர வாகனங்கள், வங்கிகளில் டெபாசிட், இன்சூரன்ஸ் பாலிசிகளில் முதலீடு, தங்க நகைகள், ரூ.1.5 லட்சம் ரொக்கம், விலை உயர்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x