Published : 08 Nov 2019 12:04 PM
Last Updated : 08 Nov 2019 12:04 PM
பாஜகவுக்கு வலிமையையும் வடிவத்தையும் அளித்தவர் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானியை அவரது பிறந்த நாளன்று பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று (வெள்ளிக்கிழமை) தனது 92-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து பாஜக தலைவர்கள் உட்பட பலரும் அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கூறுகையில், “நமது இந்திய மக்களை மேம்படுத்துவதில் அத்வானி அளித்த சிறப்பான பங்களிப்பை இந்தியா எப்போதும் மதிக்கும். அத்வானியின் பிறந்த நாளில், அவரது ஆரோக்கியமான வாழ்விற்காக நான் பிரார்த்திக்கிறேன்.
அத்வானி பல வருடங்களாக உழைத்து பாஜகவுக்கு வடிவத்தையும், வலிமையையும் அளித்தவர். பல வருடங்களாக நமது கட்சி இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் துருவமாக உருவெடுத்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் அத்வானி போன்ற தலைவர்கள்தான்.
அத்வானியைப் பொறுத்தவரை பொதுச் சேவை என்பது எப்போதும் நியாயங்களுடன் தொடர்புடையது.
இதனை ஒரு முறை கூட அத்வானி சமரசம் செய்ததில்லை. அமைச்சராக இருந்தபோது முன்னிலையில் இருந்தார். அவரது நிர்வாகத் திறன்கள் உலக அளவில் பாராட்டப்படுகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.
Scholar, statesman and one of the most respected leaders, India will always cherish the exceptional contribution of Shri Lal Krishna Advani Ji towards empowering our citizens. On his birthday, I convey my greetings to respected Advani Ji and pray for his long and healthy life.
— Narendra Modi (@narendramodi) November 8, 2019
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT