Published : 28 Oct 2019 07:20 PM
Last Updated : 28 Oct 2019 07:20 PM

உடல்நலக் குறைவு காரணமாக ப.சிதம்பரத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை

உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ப.சிதம்பரத்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறையின் காவலில் இருக்கும் ப.சிதம்பரம் திங்களன்று காலை ஆர்.எம்.எல். மருத்துவமனைக்கு உடல்நலக்குறைவு காரணமாக அழைத்து வரப்பட்டார். பிறகு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திங்கள் மாலை 5.40 மணியளவில் ப.சிதம்பரம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,

வி.ஐ.பி.அறையில் மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிதம்பரத்துக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கையில், ‘அவரது உடல்நலம் சரியில்லை’ என்று கூற அமலாக்கப்பிரிவு தரப்பு, ‘சீரியஸாக எதுவும் இல்லை” என்று கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x