Last Updated : 02 Jul, 2015 09:03 AM

 

Published : 02 Jul 2015 09:03 AM
Last Updated : 02 Jul 2015 09:03 AM

அமர்நாத் யாத்திரை தொடங்கியது

இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜம்முவில் இருந்து நேற்று தொடங்கியது.

தெற்கு காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் 3,888 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோயில் உள்ளது. இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் ஆயிரக் கணக்கானோர் யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான யாத்திரை, ஜம்மு வின் பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து நேற்று காலை 5.10 மணிக்கு தொடங்கியது.

1,280 யாத்ரீகர்கள் கொண்ட இந்த முதல் பயணக்குழுவில் 919 ஆண்கள், 191 பெண்கள், 16 குழந்தைகள் மற்றும் 154 சாதுக்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் சிஆர்பிஎப் வீரர்களின் பலத்த பாதுகாப்புடன் 34 வாகனங்களில் புறப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் அமைச்சர்கள் லால் சிங், சுகனந்தன் சவுத்ரி, பிரியா சேத்தி ஆகியோர் இவர்களை வழிய னுப்பி வைத்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் யாத்ரீகர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச் சர்கள் தெரிவித்தனர். முதல் பயணக்குழுவினர் நேற்று மாலை பல்தல் மற்றும் பஹல்காம் அடிவார முகாம்களை அடைந்தனர். இவர்கள் இன்று காலை அமர்நாத் நோக்கி புறப்படுகின்றனர்.

பல்தல் அடிவாரத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் பஹல் காமில் இருந்து 46 கி.மீ. தொலை விலும் அமர்நாத் குகைக் கோயில் உள்ளது. இந்த ஆண்டு அமர்நாத் பயணத்துக்காக 2,04,508 பேர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் 22,104 பேர் ஹெலிகாப்டர் டிக்கெட் வாங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x