Published : 24 Oct 2019 08:50 AM
Last Updated : 24 Oct 2019 08:50 AM

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: கேரளாவில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை 

புதுடெல்லி
நாடுமுழுவதும் 2 மக்களவை, 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

பல்வேறு மாநிலங்களில் 2 மக்களவை, 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.பிஹாரின் சமஸ்திபூர் மக்க ளவைத் தொகுதி, மகாராஷ்டி ராவின் சடாரா மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

உத்தரபிரதேசத்தில் 11 பேரவைத் தொகுதிகள், குஜ ராத்தில் 6, கேரளாவில் 5, பிஹாரில் 5, சிக்கிமில் 3, பஞ்சாப், அசாம் மாநிலங்களில் தலா 4, தமிழகம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2, ஒடிசா, தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மேகாலயா, புதுச்சேரி, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இடைத் தேர்தல நடைபெறும் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்களுடன் துணை ராணுவத் தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் 2 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. கேரள மாநிலத்தில் 2 தொகுதகிளில் இடதுசாரி கூட்டணியும், 2 தொகுதிகளில் காங்கிரஸ் அணியும் முன்னிலை வகிக்கின்றன. எர்ணாகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக முன்னிலை வகித்தது. பின்னர் அந்த தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x