Published : 12 Oct 2019 06:38 PM
Last Updated : 12 Oct 2019 06:38 PM

குஜராத் கிராம விழாவில் பாம்பு நடனம் வைரலான வீடியோ; 5 பேர் கைது

ஜுனாகத்,

குஜராத் கிராமத்தில் நடந்த விழா ஒன்றில் நாகம் உள்ளிட்ட பாம்புகளுடன் கர்பா நடனம் புரிந்ததாக சிறுமி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜுனாகத் மாவட்டத்தில் நடந்த இந்த நடன நிகழ்ச்சி குறித்து துணை வனப்பாதுகாவல் அதிகாரி சுனில் பெர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த மாவட்டத்தில் ஷில் கிராமத் திருவிழா நிகழ்ச்சியில் பாம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. விழாவில் நடந்த நடன நிகழ்ச்சியில் மூன்று பெண்கள் பாம்புகளுடன் கர்பா நடனமாடியுள்ளனர்.

இந்த வீடியோவை யாரோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததை அடுத்து பாம்பு நடன வீடியோ வைரலானது. இதனை அடுத்து தொடர்புள்ளவர்கள் மீது வனத்துறை சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

விழாவில் நடன நிகழ்ச்சியை நடத்தியவர், நாகங்களை கொண்டுவந்தவர் மற்றும் நடனமாடிய 3 பெண்கள் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் சிறுமி ஆவார்.

இவர்கள் மீது வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டம் 1972ன்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். இதில் 12 வயது சிறுமி மட்டும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு துணை வனப்பாதுகாவல் அதிகாரி தெரிவித்தார்.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x