Published : 10 Oct 2019 10:07 AM
Last Updated : 10 Oct 2019 10:07 AM

காஷ்மீர் விவகாரத்தில் சீனா நிலையில் மாற்றம்: இந்தியாவுடன் பேச்சு நடத்துமாறு பாக். பிரதமர் இம்ரானுக்கு அறிவுரை

புதுடெல்லி

காஷ்மீர் தொடர்பான தனது நிலைப்பாட்டை சீனா மாற்றிக் கொண்டுள்ளது. இது இருதரப்பு பிரச்சினை என்றும் இதுகுறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு சீனா அறிவுரை வழங்கி உள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், சர்வதேச பிரச்சினையாக மாற்ற முயற்சி மேற்கொண்டது. ஆனால், இந்த முயற்சிக்கு உலக நாடுகள் ஆதரவளிக்கவில்லை. ஆனால், சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தது.

குறிப்பாக, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய் யப்பட்ட பிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் வெளி யுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி, சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ-யை சந்தித்துப் பேசினார்.

பின்னர் வாங் இ செய்தி யாளர்களிடம் கூறும்போது, “ஐ.நா. உடன்படிக்கை, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதி யான முறையில் தீர்வு காண வேண்டும்” என்றார்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள் ளார். அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கெகியாங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேற்று சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, காஷ்மீர் நிலவரம் குறித்து கண்காணித்து வருவதாகவும் பாகிஸ்தான் நலன் சார்ந்த விவகாரத்தில் ஆதரவு அளிக்கப்படும் என்றும் இம்ரானிடம் ஜி ஜின்பிங் கூறிய தாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பிரச்சினைக்கு இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கூறியதாக கூறப்படுகிறது. இதுபோல சர்வதேச, பிராந்திய நிலவரம் மாறினாலும், சீனா, பாகிஸ்தான் இடையிலான நட்புறவு பிரிக்க முடியாது என்றும் சீன அதிபர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் நேற்று முன்தினம் கூறும்போது, “காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும். இதற்கு பரஸ்பரம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இது இரு நாடுகளின் நலன் சார்ந்த விஷயம். உலக நாடுகளின் விருப்பமும் இதுதான்” என்றார்.

காஷ்மீர் விவகாரத்தில் 3-ம் தரப்பு தலையீட்டை ஏற்க முடியாது என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. இதை ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்தக் கருத்து அமைந்துள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை இந்தியாவுக்கு வர உள்ளார். குறிப் பாக சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேச உள்ளனர். இந்த சூழ்நிலையில் காஷ்மீர் விவ காரத்தில் சீனா தனது நிலைப் பாட்டை மாற்றிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x