Published : 09 Oct 2019 03:58 PM
Last Updated : 09 Oct 2019 03:58 PM

சாதி, மத, சக்திகளை மதிநுட்பத்துடன் எதிர்கொள்ள வேண்டும்: மாயாவதி

லக்னோ

மறைந்த தலைவர் கன்ஷிராமின் 13வது நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ''சாதி, மத பிற்போக்கு சக்திகளை மதிநுட்பத்துடன் கையாள வேண்டும்'' என இன்று தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கான்ஷிராம் தலித்துகள் அரசியலில் முக்கிய இடத்தைப் பெற்றுத்தர போராடியவர். கடந்த 2006 அக்டோபர் 9 அன்று மாரடைப்பில் இறந்தார். இன்று கன்ஷி ராமின் 13 வது நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.

இதுகுறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் மாயாவதி கூறியுள்ளதாவது:

பகுஜன் சமாஜ் கட்சி இயக்கத்தின் நிறுவனர் கன்ஷ ராமின் 13வது நினைவுநாள் இன்று. அவருக்கு பகுஜன் சமாஜ் கட்சி அஞ்சலியை செலுத்துகிறது.

கன்ஷிராம் நினைவைப் போற்றும் இந்த நாளில் மாநில அளவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக எப்போதும் போராடியவர் அவர்.

டெல்லியில் குருத்வாரா ரகப்கஞ்ச் சாலையில் அமைந்துள்ள பிரேர்ணா கேந்திராவில் பகுஜன் நாயகன் கன்ஷிராமுக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறோம்.

சாதி மற்றும் குறுகிய சக்திகள், இன்றும் தொடரும் சாம பேத தான தண்ட இயக்கங்களுக்கு சவாலாக இருந்தவர் கன்ஷிராம் என்பதை அனைவரும் அறிவர்.

இதற்கு இன்றும் சரியான உதாரணமாக இருப்பது உத்தரப் பிரதேசம். இங்குதான் இன்றும் சாதி மத சக்திகள் கடுமையாக செயல்படுகின்றன. இவற்றை மிகவும் மதிநுட்பத்துடன் கையாள வேண்டும்.

அவரது கனவுகள் நிறைவேற்றப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு மாயாவதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x