Published : 26 Sep 2019 09:15 AM
Last Updated : 26 Sep 2019 09:15 AM

கர்நாடகாவில் 15 தொகுதிகளில் இடைத்தேர்தல்; ஆட்சியை காப்பாற்ற எடியூரப்பா வியூகம்

இரா.வினோத்

பெங்களூரு

கர்நாடகாவில் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ இடைத்தேர்த லில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய மூன்று பிரதான‌ கட்சிகளும் நேருக்கு நேர் மோதுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

கர்நாடகாவில் 2018-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும் பான்மை கிடைக்கவில்லை. இத னால் காங்கிரஸூம், மஜதவும் கூட்டணி அமைத்து குமாரசாமி தலைமையில் 14 மாதங்கள் ஆட்சி நடத்தின. இதில் அமைச்சர் பதவி கிடைக்காததால் 14 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 மஜத எம்எல்ஏக் களும் கடந்த ஜூலையில் ராஜி னாமா செய்தனர்.

இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத் தது. இந்நிலையில் காலியாகவுள்ள 17 தொகுதிகளில் ராஜராஜேஸ்வரி, மாஸ்கி ஆகிய இரு தொகுதிகள் நீங்கலாக 15 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைய‌ம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மஜத இந்த இடைத் தேர்தலில் தனியாக போட்டி யிடப் போவதாக அறிவித்துள்ளது. இதனால் இடைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மஜத என மும்முனைப் போட்டி ஏற்பட் டுள்ளது.

தற்போது இடைத் தேர்தல் நடைபெறும் 15-ல் 11 தொகுதிகள் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றவை ஆகும். எனவே அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என உள்ளூர் தலைவர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள் ளது. இதனால் முன்னாள் முதல்வர் சித்தராமையா, பரமேஷ்வர், தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோ ருடன் வேட்பாளர் தேர்வு, தேர்தல் பணி குறித்து நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

இதேபோல முன்னாள் பிரத மரும், மஜத தேசிய தலைவரு மான தேவகவுடா, 15 தொகுதிகளில் மஜத சார்பில் யாரை நிறுத்தலாம் என முன்னாள் முதல்வர் குமார சாமி, ரேவண்ணா உள்ளிட்டோ ருடன் ஆலோசனை நட‌த்தினார். அப்போது, இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் தக்கப்பாடம் கற்பிக்க முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

222 எம்எல்ஏ-க்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் 106 எம்எல்ஏ-க்களின் பலத்தை மட்டும் கொண்டு பாஜக ஆட்சி அமைத்துள் ளது. எடியூரப்பா ஆட்சியை காப் பாற்றிக்கொள்ள இந்த இடைத்தேர் தலில் கட்டாயம் 6 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அக்னி பரீட்சையாக அமைந் துள்ள இடைத்தேர்தலில் வெல்வது குறித்து எடியூரப்பா பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோ சனை நடத்தியுள்ளார். அப்போது இடைத்தேர்தல் நடைபெறும் 6 தொகுதிகள் ஒக்கலிக வகுப்பினர் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளாகும்.

காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் சிறையில் அடைக் கப்பட்டுள்ளதால் அந்த வகுப்பினர் வருத்தம் அடைந்துள்ளனர். அதனை போக்கும் வகையில் ஒக்கலிக வகுப்பினருக்கு தேர்தலில் வாய்ப்ப‌ளித்தால் வெற்றி பெற‌ முடியும் என திட்டமிட்டதாக கூறப் படுகிறது.

அதேபோல தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ், மஜத எம்எல்ஏ-க்களையே பாஜக சார்பில் மீண்டும் நிறுத்தலாமா? அதற்கு எதிர்ப்பு எழுந்தால் அவர்களின் குடும்பத்தாரை நிறுத்தலாமா? என பாஜக மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x