Last Updated : 01 Jul, 2015 08:41 AM

 

Published : 01 Jul 2015 08:41 AM
Last Updated : 01 Jul 2015 08:41 AM

கேஜ்ரிவால் வீட்டுக்கு 2 மாத மின்கட்டணம் ரூ.91 ஆயிரம்: ஆம் ஆத்மி கட்சியினர் விஐபி ஆகிவிட்டதாக பாஜக குற்றச்சாட்டு

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் வீட்டின் ஏப்ரல் மற்றும் மே மாத மின்சாரக் கட்டணம் சுமார் ரூ.91 ஆயிரம் என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

அர்விந்த் கேஜ்ரிவாலின் அரசு பங்களா, டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ளது. இந்த வீட்டின் மின்கட்டண ரசீதின் நகல்களை மாநில அரசின் பொது நிர்வாகத் துறை அளித்துள்ளது. இதில் மேற்கண்ட விவரம் தெரியவந்துள்ளது.

வழக்கறிஞரும் தகவல் உரிமைச் சட்ட ஆர்வலருமான விவேக் கார்க் எழுப்பிய கேள்விக்கு இத்தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கேஜ்ரிவால் வீட்டு மின் கட்டணம் ரூ.1 லட்சத்துக்கும் அதிகம் என்று டெல்லி பாஜக கூறியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து அமைச்சர்களின் மின்சாரப் பயன்பாட்டு கட்டணத்தை வெளியிட வேண்டும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீண் கபூர் கூறும்போது, “முதல்வர் வீட்டின் மின்சார அளவீட்டுக்காக 2 மீட்டர்கள் உள்ளன. இதில் 1 மீட்டரில் ரூ.55 ஆயிரமும், மற்றொரு மீட்டரில் 48 ஆயிரமும் (மொத்தம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரம்) பதிவாகியுள்ளது” என்றார்.

இது தொடர்பாக டெல்லி அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த விவகாரத்தில் மின் கட்ட ணத்தை சரிபார்த்த பிறகே கருத்து தெரிவிக்க முடியும்” என்றார்.

பாஜக குற்றச்சாட்டு

இதனிடையே பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா நேற்று கூறும்போது, “கேஜ்ரிவால் வீட்டு 2 மாத மின் கட்டணம் சுமார் ரூ.1 லட்சம் என்பது அதிர்ச்சி அளிக் கிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் கேஜ்ரிவால் தன்னை சாதாரண மனிதன் என்றும் எளிய வாழ்க்கை வாழ விரும்புவதாகவும் கூறினார். அரசு பங்களாவை, சைரன் பொருத் திய காரை பயன்படுத்த மாட்டேன் என்றும் கூறினார். ஆனால் மின்சாரக் கட்டணம் வெளியான பிறகுதான் இவர்கள் சாதாரண மனிதர்கள் இல்லை, விவிஐபி-க்களாக மாறிவிட்டவர்கள் என்ற உண்மை தெரியவந்துள்ளது என்றார்.

டெல்லி அரசு மறுப்பு

இந்நிலையில் கேஜ்ரிவால் வீட்டு மின் கட்டணம் குறித்த தகவலை டெல்லி அரசு நேற்று மறுத்துள்ளது.

இது தொடர்பாக டெல்லி அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பார்வையாளர்களுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த வீட்டின் மின்சாரக் கட்டணம் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் முறையே ரூ.17,000, ரூ.7,370, ரூ.22,690 என வந்துள்ளது.

இந்த வீட்டின் ஒரு பகுதியை முதல்வரின் தனி வசிப்பிடமாகக் கருதி தனி மின் இணைப்பு தரப்பட்டுள்ளது.

இதற்கான மின்சாரக் கட்டணம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் முறையே ரூ.15,175, ரூ.48,630 ஆக வந்துள்ளது. மே மாதக் கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x