Last Updated : 20 Jul, 2015 09:11 AM

 

Published : 20 Jul 2015 09:11 AM
Last Updated : 20 Jul 2015 09:11 AM

குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப தண்டனை இருக்க வேண்டும்: கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

‘குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப தண்டனை இருக்க வேண்டும்’ என்று கொலை வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.

ஹரியாணா மாநிலம் தேவ்சர் கிராமத்தைச் சேர்ந்தவர் துளிசந்த். இவரும் இவரது சகோதரர் ஷேர் சிங்கும் பேருந்து நிலையத்தில் இருந்து 1993-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி வீடு திரும்பிக் கொண் டிருந்தபோது, பியாரிலால், ரமேஷ், சுரேந்தர், ராஜ்குமார், மன்புல், நரேந்தர் ஆகிய 6 பேர் கொண்ட கும்பல் துளிசந்தை தாக்கினர். இதில் படுகாயமடைந்த துளிசந்த், கோமா நிலைக்குச் சென்று, பின்னர் அதேஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி உயிரிழந்தார். ஆறு பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப் பட்டனர். வழக்கை விசாரித்த நீதி மன்றம் அவர்களுக்கு ஏழு ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இவ்வழக்கு பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது, அவர்கள் ஏற்கனவே சிறையில் கழித்த நாட் களையே தண்டனைக் காலமாக கருதி விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து ரவீந்தர் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கள் டி.எஸ்.தாக்கூர், ஆர்.பானுமதி அடங்கிய அமர்வு, `சமூகத்தில் மக்களின் கோபத்தை பிரதிபலிக் கும் வகையில், குற்றத்தின் தன் மைக்கு ஏற்ப தீர்ப்புகள் அமைய வேண்டும். இக்கருத்து ஏற் கெனவே பல தீர்ப்புகளிலும் தெரி விக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் உயர் நீதிமன்றம் சிறை தண்டனை யில் அளித்துள்ள தீர்ப்பில் தலை யிட விரும்பவில்லை. ஆனால், அபராத தொகையை ரூ.25,000-ல் இருந்து ரூ.1,25,000 ஆக உயர்த்தி உத்தரவிடுகிறோம். இதை குற்ற வாளிகள் 8 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x