Published : 08 Sep 2019 09:22 AM
Last Updated : 08 Sep 2019 09:22 AM

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானார்

புதுடெல்லி,

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜெத்மலானி காலமானார். அவருக்கு வயது 95. அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் மகேஷ் ஜெத்மலானி வழக்கறிஞராக உள்ளார். மகள் அமெரிக்காவில் வசிக்கிறார். மற்றொரு மகள் ராணி ஜெத்மலானி ஏற்கெனவே மறைந்துவிட்டார்.

கடந்த நில மாதங்களாகவே அவர் உடல்நலக் குறைவால் வாடிவந்தார். வீட்டிலிருந்தவாறே அவர் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அவரது உயிர் பிரிந்தது.

இதனை உறுதி செய்த அவரின் மகன் மகேஷ் மலானி இன்று மாலை லோதி மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றார். வரும் 14-ம் தேதி ராம் ஜெத்மலானி தனது 96-வது பிறந்த நாளைக் கொண்டாடவிருந்த நிலையில் மறைந்தார்.

ராம் ஜெத்மலானி வாழ்க்கைக் குறிப்பு:

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பிறந்தவர். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் அவர் மும்பைக்கு குடிபெயர்ந்தார். வாஜ்பாய் அமைச்சரவையில் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்தார்.

ராம் ஜெத்மலானி 18 வயதிலேயே வழக்கறிஞரானார். அவர் 13 வயதிலேயே பள்ளிப் படிப்பை முடித்தார். 17 வயதில் சட்டப்படிப்பை முடித்தார். அந்தக் காலத்தில் 21 வயதிலேயே வழக்கறிஞராக முடியும். ஆனால் ராம்ஜெத் மலானிக்காக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் 17 வயதிலேயே வழக்கறிஞராக அனுமதிக்கப்பட்டது.

முதல் வழக்கு..

1959-ல் மகாராஷ்டிரா அரசுக்கும் நானாவி என்ற தனிநபருக்கும் இடையேயான வழக்கே அவரின் முதல் வழக்கு. இந்த வழக்கு தேசமே கூர்ந்து கவனித்தது. ராம் ஜெத்மலானி 2ஜி உள்ளிட்ட பல முக்கியமான வழக்குகளில் வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x