Published : 26 Aug 2019 10:51 AM
Last Updated : 26 Aug 2019 10:51 AM

முன் அனுமதியின்றி எதிர்க்கட்சிகள் காஷ்மீர் சென்றிருக்கக் கூடாது: மாயாவதி கருத்து

லக்னோ,

முன் அனுமதி பெறாமல் எதிர்க்கட்சியினர் காஷ்மீர் சென்றிருக்கக் கூடாது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை சில ட்வீட்களைப் பதிவு செய்துள்ளார்.
அவற்றில் அவர் தெரிவித்திருப்பதாவது:

முன் அனுமதி பெறாமல் எதிர்க்கட்சியினர் காஷ்மீர் சென்றது மத்திய அரசும், காஷ்மீர் ஆளுநரும் அரசியல் செய்வதற்கான வாய்ப்பாகிவிட்டது அல்லவா? எதிர்க்கட்சியினர் காஷ்மீர் செல்வதற்கு முன்னதாகவே அனுமதி வாங்கியிருக்க வேண்டும்.

பாபா சாஹிப் அம்பேத்கர் எப்போதுமே சமத்துவம, ஒற்றுமை, ஒருமைப்பாட்டை வலியுறுத்தினார். அதனால்தான் அவர் ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ வரவேறவில்லை.

இந்த காரணத்தால்தான் பகுஜன் சமாஜ் கட்சியும் 370 சட்டப்பிரிவு நீக்கத்தை ஆதரித்தது. இந்திய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டு 69 ஆண்டுகளுக்குப் பின்னர் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப சில காலமாகலாம். அதனால் உச்ச நீதிமன்றமே கூறியிருப்பதுபோல் சில காலம் காத்திருக்கலாமே.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த சனிக்கிழமை ராகுல் காந்தி உள்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் காஷ்மீர் சென்றனர். காஷ்மீர் நிலவரத்தை நேரில் அறியவும், காஷ்மீர் மக்களுடன் கலந்துரையாடவும் அவர்கள் சென்றனர். ஆனால், அவர்கள் அனைவருமே ஸ்ரீநகர் விமான நிலையத்தோடு திருப்பி அனுப்பப்பட்டனர்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x