Published : 16 Aug 2019 08:52 PM
Last Updated : 16 Aug 2019 08:52 PM

ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக்: கேரளாவில் முதல் நபர் கைது

கோழிக்கோடு:

கேரள மாநிலம் கோழிக்கோடு முக்கம் என்ற கிராமத்தில் 43 வயது நபர் ஒருவர் விஷயம் தெரியாமல் மூன்று முறை ஒரே நேரத்தில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்து போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

தாமரசேரி முதன்மை நிலை மேஜிஸ்ட்ரேட் கொடுத்த வாரண்ட்டின் அடிப்படையில் முக்கம் போலீஸார் இந்த நபரைக் கைது செய்தனர். நாடாளுமன்றத்தில் உடனடி முத்தலாக்கை குற்றமாக்கும் மசோதா நிறைவேற்றப் பட்ட பிறகு கேரளாவில் இதன் கீழ் கைது செய்யப்படும் முதல் நபராவார் இவர்..

குமரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஈ.கே.ஹுசாம் என்பவர்தான் கைது செய்யப்பட்ட அந்த நபர்.

சட்டப்பிரிவு 3 மற்றும் 4ன் கீழ் உசாம் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் படி 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அவர் எதிர்கொள்கிறார்.

ஹுசாம் ஆகஸ்ட் 1ம் தேதி மூன்று முறை அடுத்தடுத்து தலாக் கூறி தன் மனைவையை விவாகரத்து செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டை அணுகி மனு செய்தார், இதனையடுத்து கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x