Published : 09 Aug 2019 08:01 PM
Last Updated : 09 Aug 2019 08:01 PM

உடல் நலக்குறைவு: எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி அனுமதி

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையின் இருதயம் மற்றும் நரம்பியல் விஞ்ஞான மையத்தில் அருண் ஜேட்லி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவர்கள் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர்.

உடல் சோர்வு, பலவீனம் மற்றும் சவுகரியமின்மை காரணமாக அருண் ஜேட்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் அவர் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டதாக வேறு சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x