Published : 22 Jul 2019 11:04 AM
Last Updated : 22 Jul 2019 11:04 AM

'தேவைப்பட்டால் வனத்துறை அதிகாரிகளை தாக்குங்கள்': தெலங்கானா பாஜக எம்.பி. சர்ச்சைப் பேச்சு

"உங்கள் நிலங்களில் பாரம்பரிய விவசாயத்தைத் தடுத்து மாற்று மரக்கன்றுகளை நடும் வனக் காவலர்களை தடுத்து நிறுத்துங்கள், மீறி நட்டுவைத்தால் அவற்றை பிடுங்கி எரியுங்கள் தேவைப்பட்டால் வன அதிகாரிகளை தாக்குங்கள்" என்று தெலங்கானா பாஜக எம்.பி. ஒருவர் சர்ச்சைக் கருத்தை முன்வைத்திருக்கிறார்.

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் எம்.பி. சோயம் பாபு ராவ் அண்மையில் உத்னூர் மண்டல் பகுதியில் பழங்குடியின தலைவர் டுட்டும் டெப்பாவின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், "உங்கள் நிலங்களில் பாரம்பரிய விவசாயத்தைத் தடுத்து மாற்று மரக்கன்றுகளை நடும் வனக் காவலர்களை தடுத்து நிறுத்துங்கள், மீறி நட்டுவைத்தால் அவற்றை பிடுங்கி எரியுங்கள் தேவைப்பட்டால் வன அதிகாரிகளை தாக்குங்கள். என்ன நடக்கிறது என்று நான் பார்த்துக் கொள்கிறேன்.

நாம் எப்போதுமே நம் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். நம் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனாலும், நம் உரிமைகளைப் பெற நாம் தொடர்ந்து அரசாங்கத்துக்கு எதிராகப் போராடித்தான் ஆகவேண்டும்" என்று பேசினார்.

அடிலாபாத் வனப்பகுதியில் பழங்குடிகளில் பாரம்பரிய விவசாய நிலங்களிலும் வனத்துறை காடு வளர்ச்சி திட்டத்தின் கீழ் மரங்களை நட்டுவரும் சூழலில் பாஜக எம்.பி. சோயம் பாபு ராவ் இக்கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x