Published : 22 Jul 2019 09:19 AM
Last Updated : 22 Jul 2019 09:19 AM

நெடுஞ்சாலை கட்டுமான திட்டங்களுக்கு எல்ஐசி ரூ.1.25 லட்சம் கோடி கடன்: போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

 

புதுடெல்லி

நெடுஞ்சாலை உள்ளிட்ட உட்கட் டமைப்பு திட்டங்களுக்கு இந்தியா வின் மிகப்பெரிய காப்பீடு நிறு வனமான எல்ஐசி ரூ.1.25 லட்சம் கோடி கடன் தர ஒப்புதல் அளித்துள் ளதாக மத்திய சாலை போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க நாட்டின் உட்கட்ட மைப்பு மேம்படுத்த வேண்டியுள் ளது. இதற்காக ரூ.8.41 லட்சம் கோடி மதிப்பிலான பாரத்மாலா திட்டம் நாடு முழுவதும் நெடுஞ்சாலைப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட் டங்களைச் செயல்படுத்த தேவை யான நிதியைத் திரட்டுவதில் பல் வேறு புதுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அவர் கூறினார்.

அதன்படி தேசிய நெடுஞ் சாலைத் துறை கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதித் திரட்ட முடிவு செய்துள்ளது. இந்தக் கடன் பத்திரங்களில் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி என, 2024 வரையில் ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.1.25 லட் சம் கோடி முதலீடு செய்ய எல்ஐசி ஒப்புக்கொண்டுள்ளது என்றார்.

இந்த நிதி முழுவதுமாக பாரத்மாலா திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க செலவிடப்பட உள்ளது.

பாரத்மாலா திட்டத்தில் தற்போது ரூ.5.35 லட்சம் கோடி அளவுக்கு திட்டங்களைச் செயல்படுத்த ஒப்பு தல் அளிக்கப்பட்டுள்ளது. முதல்கட் டமாக 34800 கிலோ மீட்டர் அளவுக்கு சாலைகள் அமைக்கப் பட உள்ளன. இதில் தேசிய நெடுஞ் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் மீதமுள்ள 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரமும் அடங்கும்.

எல்ஐசி நிறுவனத்திடமிருந்து பெறப்படும் கடனுக்கான வட்டிவிகி தம் உள்ளிட்ட விவரங்கள் விவாதிக் கப்பட உள்ளன. பாரத்மாலா திட்டத் துக்கான நிதி செஸ் வரி, சுங்கக் கட்டண வருவாய், சந்தை கடன்கள், தனியார் துறை பங்களிப்பு, காப்பீடு நிதி, ஓய்வுகால நிதி, மசாலா பாண்டுகள் போன்றவற்றிலிருந்து பெறப்பட உள்ளன. அடுத்த 30 வருடங்களில் நிதித் திரட்டப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x