Published : 20 Jul 2019 04:07 PM
Last Updated : 20 Jul 2019 04:07 PM

மயில்களைக் கொன்றதாக நபரை அடித்து கொன்ற கும்பல்: மத்திய பிரதேசத்தில் தொடரும் கும்பல் வன்முறை

மத்திய பிரதேச மாநிலம், நீமுச் மாவட்டத்தில் உள்ள லாசுதியா ஆத்ரி கிராமத்தில் மயில்களைக் கொன்றதாக ஹிராலால் பன்ச்சாதா என்ற நபர் 10 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொன்றது பரபரப்பாகியுள்ளது.  போலீஸார் 9 பேரை ஏற்கெனவே கைது செய்துள்ளனர்.

மயில்களைக் கொன்றதாக புகார் எழுந்த பன்ச்சாதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் போலீஸார் வனவிலங்குச் சட்டத்தில் வழக்குத் தொடர்ந்தனர். கொல்லப்பட்ட பன்ச்சாதாவின் மகன் ராகுல் மற்றும் 2 பேர் தலைமறைவாகியுள்ளனர், போலீசார் இவருக்கு வலை விரித்துள்ளனர். 

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் குக்தேஷ்வர் காவல்நிலைய சரக எல்லைக்குள் நடந்தது.  அதாவது பன்ச்சாத உட்பட 4 பேர் வயல்வெளிகளில் ஓடியதை கிராமத்தினர் சிலர் பார்த்துள்ளனர்.  கிராமத்தினர் அவர்களை விரட்டினர், இதில் ஹிராலால் மட்டும் மக்களிடம் சிக்கினான். அவன் கையில் 4 மயில்கள் உயிரிழந்த நிலையில் கிடந்ததால் ஆத்திரம் அடைந்த ஒரு 10 பேர் கொண்ட கும்பல் ஹிராலாலை கடுமையாகத் தாக்கினர். தாக்கியதோடு அவரை வயல்வெளியிலேயே விட்டுவிட்டு வந்தனர். 

யாரோ ஒருவர் போலீஸ் உதவி எண் 100க்கு போன் செய்து இந்தச் சம்பவத்தை தெரிவிக்க ஹிராலால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

பிறகு ஹிராலால் மருத்துவமனையில் காயங்களுக்கான சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இதே மாவட்டத்தில்தான் 3 நாட்களுக்கு முன்பாக ஆடு திருடியதாக 3 பேரை கட்டி வைத்து அடித்த சம்பவம் கடும் கண்டனங்களுக்குள்ளானது. வியாழக்கிழமையன்று குழந்தைகளைக் கடத்துகிறார் என்ற சந்தேகத்தின் பேரில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை கிராம மக்கள் அடித்து உதைத்த சம்பவம் நடந்துள்ளது. இவரும் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

 

-பிடிஐ 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x