Published : 31 Jul 2015 08:34 AM
Last Updated : 31 Jul 2015 08:34 AM

யாகூப் கடைசி 18 மணி நேர போராட்டம்

மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று காலையில் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, தண்டனையிலி ருந்து தப்பிப்பதற்காக என்ன வெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்து பர பரப்பை ஏற்படுத்தினார். இவரது மனுவை உச்ச நீதிமன்றம் பல முறை நிராகரித்த போதிலும், இந்திய வரலாற்றிலேயே இது வரை இல்லாத வகையில், புதன்கிழமை நள்ளிரவில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார். அதுபற்றிய 18 மணி நேர போராட்ட விவரம் வருமாறு:

காலை 11 (ஜூலை 29):

யாகூப் மேமன் இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்துக்கு 14 பக்க கருணை மனுவை அனுப்பி வைத்தார்.

மாலை 4 :

மேல் நடவடிக்கைக் காக கருணை மனுவை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார் குடியரசுத்தலைவர்.

இரவு 8.30 :

குடியரசுத்தலைவர் அலுவலகத்துக்கு நேரில் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேமனின் கருணை மனுவை நிராகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள தகவலை தெரிவித்தார்.

இரவு 9.15 :

மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் எல்.சி.கோயல் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆகியோர் குடியரசுத்தலைவர் அலுவலகம் சென்றனர்.

இரவு 10.45 :

மேமனின் கருணை மனுவை பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.

இரவு 10.45 :

மூத்த வழக்கறிஞர் களான பிரசாந்த் பூஷண் மற்றும் ஆனந்த் குரோவர் ஆகியோர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்துவின் வீட்டுக்குச் சென்று மேமனை தூக்கிலிட தடை விதிக்கக் கோரி புதிய மனு தாக்கல் செய்தனர்.

இரவு 11.30 :

மேமனின் மனுவை புதன்கிழமை தள்ளுபடி செய்து மரண தண்டனையை உறுதி செய்த மற்ற 3 நீதிபதிகள் தலைமை நீதிபதி வீட்டுக்குச் சென்றனர்.

அதிகாலை 1.00 (ஜூலை 30):

மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா வீட்டுக்கு காட்சி திரும்பியது.

அதிகாலை 1.30 :

நீதிபதி மிஸ்ராவின் வீட்டுக்கு வழக்கறிஞர் கள் சென்றனர்.

அதிகாலை 1.35 :

உச்ச நீதிமன்றத்தில் அதிகாலை 2.30-க்கு விசாரணை நடைபெறும் என மூன்று நீதிபதிகள் (தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சந்திர பன்ட், அமிதவா ராய்) அமர்வு அறிவித்தது.

அதிகாலை 2.10 :

நாக்பூர் மத்திய சிறை காவலர் ஒருவர், நாக்பூரில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த மேமனின் சகோதரரிடம் ஒரு கடிதத்தை வழங்கினார்.

அதிகாலை 2.30 :

நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்துக்கு வந்தனர். ஆனால், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி வர தாமதமான தால் விசாரணை ஒத்திவைக்கப் பட்டது.

அதிகாலை 3.20 :

மேமனின் மனு மீது விசாரணை தொடங்கியது.

அதிகாலை 4.50 :

ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இருதரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், மேமனின் மனுவை நிராகரித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x