Last Updated : 16 Jul, 2015 09:04 AM

 

Published : 16 Jul 2015 09:04 AM
Last Updated : 16 Jul 2015 09:04 AM

நாட்டில் முதல் முறையாக பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகளை பரிசோதிக்க `இ-கேட்

நாட்டில் முதல்முறையாக பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் நுழைவுசீட்டை பரிசோதிக்க‌ கணினி மூலமாக இயங்கும் அதி நவீன `இ-கேட்' பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. முதல்கட்டமாக உள் நாட்டு விமான முனையத்தில் செயல்படுத்தப்பட்ட இந்த முறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள‌து.

இந்த நவீன முறையில் பயணிகள் தங்களது நுழைவுச் சீட்டில் உள்ள `2-டி' பார்கோட் அல்லது செல்போனில் உள்ள நுழைவு சீட்டை அதற்கான பகுதியில் காட்ட வேண்டும். இதனை `இ-கேட்' ஆராய்ந்து சரியானதாக இருந்தால் தானாக திறந்து பயணியை உள்ளே செல்ல அனுமதிக்கும். மேலும் பயணி குறித்த தகவல்களை திரையிலும் வெளியிடும்.

இதனைத் தொடர்ந்து பயணிகள் எளிதாக சோதனை யிடும் பகுதிக்கும், விமானம் ஏறும் பகுதிக்கும் செல்ல முடியும். இ-கேட் அமைந்துள்ள பகுதி சிசிடிவி மூலமாக முழுவதும் கண்காணிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் பயணச் சீட்டு, நுழைவுச் சீட்டு ஆகியவற்றை பணியாளர்கள் மூலம் பரிசோதிப்பது உள்ளிட்ட பணிகள் முற்றிலுமாக குறையும். முதல் கட்டமாக இந்த இ-கேட் திட்டம் உள்நாட்டு விமான முனை யத்தில் ஒரு குறிப்பிட்ட பாதை யில் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x