Published : 22 Jul 2015 09:16 AM
Last Updated : 22 Jul 2015 09:16 AM

சேஷாசலம் என்கவுன்ட்டர் விவகாரம்: திருப்பதியில் சாட்சிகளிடம் விசாரணை

திருப்பதி சேஷாசலம் என்கவுன்ட் டர் வழக்கில் தமிழகத்தை சேர்ந்த சாட்சிகளிடம் திருப்பதி பத்மாவதி பல்கலைக்கழக வளாகத்தில் ஆந்திர சிறப்பு விசாரணை குழு போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதில் செம்மரங்கள் கடத்தியதாக கடந்த மே 7-ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 20 பேரை ஆந்திர அதிரடி போலீஸார் சுட்டு கொன்றனர்.

இந்த வழக்கில் சாட்சிகளாக உள்ள திருவண்ணாமலை மாவட்டம் அர்ஜுனாபுரத்தை சேர்ந்த சேகர், மேல்கணவாவூரை சேர்ந்த இளங்கோ, தர்மபுரி மாவட்டம், சித்தேரியை சேர்ந்த பாலசந்தர் ஆகியோரை திங்கள்கிழமை அவர்கள் ஊரில் இருந்து ஆந்திர சிறப்பு விசாரணை குழு போலீஸார் திருப்பதிக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். ஆனால் இவர்களை தமிழகத்திலேயே விசாரிக்க வேண்டுமென சாட்சிகளின் வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு சிறப்பு விசாரணை குழு போலீஸார் ஒப்பு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சேகர், இளங்கோ, பாலசந்தர் ஆகியோர் திருப்பதிக்கு திங்கள்கிழமை இரவு வேனில் அழைத்துச் செல் லப்பட்டனர். இவர்களின் பாதுகாப் பிற்காக திருவண்ணாமலையை சேர்ந்த 10 போலீஸாரும் உடன் சென்றனர். உறவினர்கள் மற்றும் மக்கள் கண்காணிப்பக அமைப்பினரும் உடன் சென்றனர்.

ஆர்ப்பாட்டம்

அப்போது ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே போலீஸ் வேனை முற்றுகையிட்டு திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் விசாரணை நடந்த உடன் உடனடியாக சாட்சி களை தமிழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

விசாரணை நடத்திய பின்னர் சாட்சிகள் அனைவரும் பாதுகாப் பாக சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் என சிறப்பு விசாரணை போலீஸார் உறுதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து திங்கள் கிழமை நள்ளிரவு திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் பல்கலைக்கழக வளாகத்துக்கு சாட்சிகள் கொண்டு செல்லப் பட்டனர். இவர்களுடன் தமிழக போலீஸார் மற்றும் சாட்சி களின் உறவினர்கள், கண்காணிப் பக அமைப்பினர் அனுமதிக்கப் படவில்லை.

பின்னர் நேற்று காலை 10 மணி வரை சேகர், இளங்கோ, பாலசந்தர் ஆகியோரிடம் தனித் தனியாக விசாரணை நடத்தப் பட்டது. பின்னர் அவர்களது சொந்த ஊர்களுக்கு தமிழக போலீஸாரின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x