Published : 24 Jun 2015 08:33 AM
Last Updated : 24 Jun 2015 08:33 AM

கர்நாடகத்தில் தமிழர்கள் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு: சாம்ராஜ்நகர் தொழில் பூங்காவை சித்தராமையா தொடங்கி வைத்தார்

கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகரில் தமிழக முதலீட்டாளர்களை கவரும் வகையில் 1,595 ஏக்கர் பரப்பளவில் உருவாகியுள்ள‌ தொழில் பூங்காவை அம்மாநில முதல்வர் சித்தராமையா நேற்று தொடங்கி வைத்தார்.

இதில் 300-க்கும் மேற்பட்ட தமிழக முதலீட்டாளர்கள் ரூ. 12 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளனர்.

கடந்த 2014, ஜனவரியில் கோவையில் நடந்த முதலீட்டாளர் கள் சந்திப்பில் பேசிய சித்த ராமையா, “சாமராஜ்நகர் மாவட்டத் தில் 1,595 ஏக்கர் பரப்பில் அமையவுள்ள தொழில் பூங்கா வில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300 தொழில் முதலீட்டாளர்கள் முதல்கட்டமாக சாம்ராஜ்நகரில் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் தொழில் முதலீடுகள் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.

இதையடுத்து சாமராஜ்நகர் தொழில் பூங்காவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு 1 ஏக்கர் நிலம் ரூ.39.5 லட்சத்துக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு வழங்கப்பட்டது. இங்கு கிரானைட், ஜவுளி, தோல், ஆட்டோமொபைல், வேளாண்மை, உணவு பதனிடுதல், ஆயுர்வேதம் மற்றும் சிறு தொழில் களின் ஆலைகள் அமைக்கப்படு கின்றன. அடுத்த 6 மாதங்களில் முழு அளவில் நிறைவடைய உள்ள இந்த தொழில் பூங்கா மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொழில் பூங்காவை கர்நாடக‌ முதல்வர் சித்தராமையா நேற்று காலை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, “கடந்த காலங்களில் கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் அரசியல் ரீதியாக துரதிருஷ்டவசமான சில சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் பல்வேறு தடைகளைத் தாண்டி கர்நாடகத்தில் முதலீடு செய்துள்ள தமிழக முதலீட்டாளர்களுக்கு முழு பாதுகாப்பும் ஒத்துழைப்பும் அளிக்கப்படும்.

தற்போது ரூ. 12 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளதைப் போல மேலும் பலஆயிரம் கோடி முதலீட்டை கர்நாடகம் எதிர்பார்க் கிறது. தமிழகத்தில் இருந்து முதலீடு களை கவரும் வகையில் சாம்ராஜ் நகரில் இருந்து கோவைக்கு விமானம் மற்றும் சாலை போக்குவரத்து தொடங்கப்படும். முதலீட்டாளர்களுக்கு சாதகமான புதிய தொழில் கொள்கை வகுக்க தயாராக உள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x