Published : 18 Jun 2015 08:37 AM
Last Updated : 18 Jun 2015 08:37 AM

சுஷ்மா ராஜினாமா செய்ய வேண்டும்: கர்நாடக முதல்வர் வலியுறுத்தல்

கர்நாடக‌ முதல்வர் சித்தராமையா நேற்று மைசூருவில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

ஐபிஎல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு பாஜகவை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் உதவியது வெளிச் சத்துக்கு வந்துள்ளது. இத‌ன் மூலம் நாட்டில் தேடப்படும் பல குற்றவாளிகளுக்கு பாஜக அடைக்கலமாக இருப்பது உறுதியாகி யுள்ளது. லலித் மோடிக்கு உதவியதை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நியாயப்படுத்த முடியாது. சுஷ்மா ஸ்வராஜின் இந்த செயலை ஆதரிக்கும் அத்தனை பேரும் ஆபத் தானவர்கள்.

சுஷ்மா ஸ்வராஜ் மனிதாபிமான முறையில் லலித் மோடிக்கு உதவியதாக கூறுவது முற்றிலும் பொய்யானது. இதனால் சுஷ்மா ஸ்வராஜும், அவரது குடும்பத்தினரும் நேரடி யாகவும் மறைமுகமாகவும் ஆதாயங்களை அடைந்துள்ளன‌ர். மனைவிக்கு புற்றுநோய் எனக்கூறி தப்பிச் சென்ற லலித் மோடி தற்போது வெளிநாடுகளில் உல்லாசமாக சுற்றி வருகிறார். லலித் மோடிக்கு உதவிய சுஷ்மா ஸ்வராஜும் மற்ற பாஜக தலைவர்களும் தாவூத் இப்ராஹிமுக்கு உதவ தயாராக இருக்கிறார்களா?

ஊழல் கறை படிந்த லலித் மோடிக்கு உதவியதால், தானாக முன்வந்து தார்மீக பொறுப்பேற்று சுஷ்மா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தனது சுயநலத்துக்காக குற்ற வாளிகளை தப்பிக்க விடும் இவரைப் போன்றவர்கள் முக்கிய பொறுப்பில் தொடர்ந்தால் மேலும் பல குற்றவாளிகளை தப்பிக்க விடுவார்கள்.

எனவே பிரதமர் நரேந்திர மோடி, சுஷ்மா ஸ்வராஜ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x