Published : 01 May 2015 07:47 AM
Last Updated : 01 May 2015 07:47 AM

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு: நவீன் ஜிண்டால் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்யாதது ஏன்?- சிபிஐ-க்கு நீதிமன்றம் கண்டனம்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறை கேடு நடந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், தொழிலதிபர் நவீன் ஜிண்டாலின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்யாததற்கு சிபிஐக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது நீதி பதி பரத் பராஷர் கூறும்போது, “ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் அவர்களது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்வதை சிபிஐ வழக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், இந்த வழக்கில் சிபிஐயின் கொள்கை பின்பற்றப்படவில்லை. பிரபலமானவர் என்பதற்காக நவீன் ஜிண்டால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படவில்லை. இது கண்டிக்கத்தக்கது” என்றார்.

அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் வி.கே. சர்மா கூறும்போது, “நவீன் ஜிண்டாலின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்வது குறித்து சிபிஐ அலுவலகம்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

இதுகுறித்து புலனாய்வு அதி காரி கூறும்போது, “பாஸ் போர்ட்டை ஒப்படைக்குமாறு ஜிண்டாலுக்கு நோட்டீஸ் அனுப் பப்பட்டது. ஆனால், அவர் தன் னுடைய பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டாம் என்று கோரிய துடன், அதன் வண்ண நகலை ஒப்படைத்துள்ளார்” என்றார்.

பின்னர் நீதிபதி கூறும்போது, “அனைத்து வழக்கிலும் வரும் காலத்தில் ஒரே மாதிரியான கொள்கையை கடைபிடிப்பதை சிபிஐ இயக்குநர் உறுதி செய்ய வேண்டும். நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்கக் கூடாது. இந்த வழக்கின் மீதான விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்றார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும் தொழிலதிபருமான நவீன் ஜிண்டால், முன்னாள் மத்திய அமைச்சர் தாசரி நாராயண ராவ், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா உட்பட 15 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x