Last Updated : 29 May, 2015 08:41 AM

 

Published : 29 May 2015 08:41 AM
Last Updated : 29 May 2015 08:41 AM

காஷ்மீரில் ஆயுதப்படை சட்டம் அவசியம்: பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் திட்டவட்டம்

ஜம்மு காஷ்மீரில் ராணுவம் செயல்பட வேண்டும் என்றால் அங்கு ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் அவசியம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் அமலில் உள்ள சர்ச்சைக்குரிய இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிலைப்பாடு பற்றி கேட்டதற்கு பாரிக்கர் கூறியதாவது:

பதற்றமான பகுதிகளில் இந்த சட்டம் அமலில் இருந்தால்தான் அங்கு ராணுவம் செயல்பட முடியும். இல்லையெனில் அங்கு ராணுவம் இயங்க முடியாது. எல்லையில் ஊடுருவல்களை தடுக்க முடியாது.

சர்ச்சைக்குரிய இந்த சட்டத்தை விலக்கிக்கொள்வது பற்றி முடிவு எடுக்கக்கூடியது உள்துறை அமைச்சகம்தான். உள்நாட்டுப் பாதுகாப்பை கவனிக்கும் பொறுப்பு ராணுவத்துக்கு கிடையாது.

உள்நாட்டு பாதுகாப்புப் பணி ராணுவத்துக்கு கொடுக்கப்பட்டால் அதற்கேற்றவகையில் உரிய அதிகாரம் தரப்படவேண்டும். அந்த அதிகாரம் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தில் கிடைக்கிறது.

மணிப்பூரின் சில பகுதிகளில் இந்த சட்டம் விலக்கிக்கொள்ளப்பட் டதை அடுத்து அந்த பகுதிகளில் ராணுவம் இயங்கவில்லை என்பதை உதாரணமாக சொல்வது கட்டாயம். இவ்வாறு மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை விலக்கிக் கொள்ள ராணுவம் ஒப்புக்கொள்ள வில்லை. இந்த சட்டத்தை விலக்கி னால் வன்முறை, தீவிரவாதம் அதி கரிக்கும் என்று ராணுவம் கருது கிறது.

தீவிரவாத தடுப்பு நடவடிக்கை களை ராணுவம் எடுக்கும்போது பாதுகாப்புப் படைகளுக்கு சட்ட பாதுகாப்பும் அதிகாரமும் வழங்கு கிறது சர்சைக்குரிய இந்த சட்டத் தின் 4 மற்றும் 7-வது பிரிவு. இதை திருத்தவேண்டும் அல்லது இந்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

எந்த ஒரு வீட்டுக்குள்ளும் சென்று தேடுதல் பணி செய்வதோடு வாரண்ட் இல்லாமல் கைது செய்ய வும் பிரிவு 4 அதிகாரம் தருகிறது. மேலும் எந்தவொரு வாகனத்தையும் தடுத்த நிறுத்தி சோதனையிடலாம், பறிமுதல் செய்யலாம், தீவிரவாதி கள் தங்கி இருப்பதாக கருதப் படும் மறைவு இடங்களை அழிக்க லாம், ஆயுதங்கள் இருந்தால் அழிக்கலாம், தாக்குதல் நடத்தலாம், உயிரிழப்பு ஏற்பட்டாலும் பொருட் படுத்த தேவையில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x