Last Updated : 23 Apr, 2015 07:38 PM

 

Published : 23 Apr 2015 07:38 PM
Last Updated : 23 Apr 2015 07:38 PM

விவசாயி தற்கொலையைத் தூண்டியது ஆம் ஆத்மி கட்சியே: டெல்லி போலீஸ் குற்றச்சாட்டு

ராஜஸ்தான் விவசாயி கஜேந்திர சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு ஆம் ஆத்மி கட்சியே காரணம் என்று டெல்லி போலீஸ் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், அவரைக் காப்பாற்ற முடியாமல் அனைத்து இடையூறுகளையும் ஆம் ஆத்மி செய்ததாக டெல்லி போலீஸ் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இது குறித்து டெல்லி அரசு உத்தரவிட்ட மேஜிஸ்ட்ரேட் மட்ட விசாரணையையும் டெல்லி போலீசார் விமர்சித்துள்ளனர். இதற்கான சட்ட எல்லைக்குள் அது இல்லை என்று சாடினர்.

இது குறித்து பதிவு செய்த புகாரில் டெல்லி போலீஸ் கூறியிருப்பதாவது:

ஆம் ஆத்மி தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் விவசாயியைத் தற்கொலைக்கு தூண்டிய விவகாரம் ஆகும் இது. மேலும், போலீஸின் வேண்டுகோள்களுக்கும் அவர்கள் செவிசாய்க்கவில்லை” என்று கூறியுள்ளது.

இது குறித்து பேரணி இடத்தில் அப்போது பணியிலிருந்த யாதவ் என்ற இன்ஸ்பெக்டர் அளித்த புகாரில், “புதன்கிழமை மதியம் 12.50 மணியளவில் ஆம் ஆத்மி தலைவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது மரத்தின் மீது இருந்த நபர் துடைப்பத்தை ஆட்டிக் கொண்டிருந்தார் அதனை சிலர் கீழேயிருந்து கை தட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்த்தனர். அப்போது நான் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு ஒயர்லெஸ் மூலம் மரத்தின் மேல் இருப்பவரை தூண்ட வேண்டாம் என்றும், அவரை கீழே இறக்க எங்களுக்கு உதவிபுரியுமாறும் கேட்டுக் கொண்டோம்.” என்றார்.

ஆனால், ஆம் ஆத்மி தொண்டர்களோ, தலைவர்களோ வேண்டுகோள்களுக்கு செவிசாய்க்கவில்லை என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x