Last Updated : 08 Apr, 2015 09:41 AM

 

Published : 08 Apr 2015 09:41 AM
Last Updated : 08 Apr 2015 09:41 AM

ரூ.600-ல் மோடி கிராமத்துக்கு சுற்றுலா: குஜராத் சுற்றுலாத் துறை திட்டத்துக்கு வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த கிராமத்துக்கு ரூ.600 செலவில் ஒருநாள் சுற்றுலா திட்டத்தை குஜராத் மாநில சுற்றுலாத் துறை தொடங்கியுள்ளது.

குஜராத் மாநிலம் மேசனா மாவட்டத்தில் உள்ள வத்நகர். இங்குதான் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தார்.

இங்கு பிரதமர் நரேந்திர மோடி படித்த பள்ளி, ரயில் நிலையத்தில் தனது தந்தையின் கடை மூலம் டீ விற்ற பகுதி உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றிப் பார்க்கும் வகையில் ஒரு நபருக்கு ரூ. 600 என்ற கட்டணத்தில் குஜராத் மாநில சுற்றுக் கழகம், அக்சர் என்ற தனியார் சுற்றுலா நிறுவனத்துடன் இணைந்து ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.

“’மோடியின் கிராமத்திலிருந்து ஓர் உதயம்’ என்ற பெயரில் இச் சுற்றுலாத் திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ‘குஜராத் வைப்ரன்ட்’ முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குப் பிறகு இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற் றுள்ளது என அக்சர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தில், அகமதாபாத் மற்றும் காந்திநகரிலிருந்து வத் நகர் செல்லும் வரை உள்ள பிற சுற்றுலாத் தலங்களும் காண்பிக்கப்படுகின்றன. மோடி பிறந்த வீடு, படித்த ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆகியவையும் காண்பிக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக அக்சர் நிறுவனத்தின் பங்கஜ் சவுத்ரி கூறும்போது, “மோடி குறித்து அதிகம் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காக அவரின் பள்ளி நண்பர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் ஏற்படுத்தித்தரப்படுகிறது. மேலும், ஹத்கேஸ்வர் கோயிலில் பிரார்த்தனையின்போது மோடி வாசித்த மேளங்களும் பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்படுகிறது. தொல்லியல் சிறப்பு வாய்ந்த புத்த மத தலங்கள், தனது சிறு வயதில் முதலைகளைப் பிடித்து மோடி விளையாடிய சர்மிஷ்டா ஏரி உள்ளிட்டவையும் சுற்றிக் காண்பிக்கப்படுகின்றன.

மிகச் சாதாரண நிலையிலிருந்து தேசத்தின் பிரதமராக உயர்ந்துள்ள மோடியின் கிராமத்தைக் காண நாட்டின் பல்வேறு பகுதி மக்களும் ஆர்வம் காட்டுகின்றனர். 56 இருக்கைகள் கொண்ட ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. பெரும் பாலான சமயம் அதிக மக்கள் வருவதால் 2 பேருந்துகளை இயக்குகிறோம்.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x