Published : 24 Mar 2015 09:21 AM
Last Updated : 24 Mar 2015 09:21 AM

பொதுத்தேர்வில் பிட் முறைகேடு: எங்கள் ஆட்சியில் காப்பியடிக்க புத்தகத்தையே கொடுத்தோம் - பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கிண்டல்

பிஹார் மாநில பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு பெற்றோர்களே விடை எழுதிய துண்டுச் சீட்டுகளை (பிட்) கொடுத்த விவகாரம் ஊடகங்க ளில் வெளியாகி பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், எங்கள் ஆட்சி யில் தேர்வு முறைகேடுகளைத் தவிர்க்க மாணவர்களிடம் புத்தகங்களைக் கொடுத்து, பார்த்து எழுதச் சொல்லி விட்டோம் என பிஹாரின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிஹார் கல்வி அமைச்சர் பி.கே. ஷாஹி, “நூற்றுக் கணக்கான பெற்றோர் கட்டிடத் தில் ஏறி விடை எழுதிய துண்டுச்சீட்டு களைக் கொடுத்துள்ளனர். அதற் காக அவர்களை துப்பாக்கியால் சுடவா முடியும். பெற்றோரின் ஒத் துழைப்பு இல்லாமல், நேர்மையான தேர்வு நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை” எனக் கூறியிருந்தார்.

லாலு கிண்டல்

இதனிடையே, பக்சார் மாவட்டத் தில் உள்ள கிராமம் ஒன்றில் புதிய பள்ளி ஒன்றை லாலு பிரசாத் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

பள்ளியின் சுவர்களில் பெற்றோர் பல்லி மாதிரி ஏறி, விடையெழுதிய துண்டுச் சீட்டு களைக் கொடுத்துள்ளனர்.

இதுபோன்ற புகைப்படம் எங்களின் ஆட்சியில் வெளியாகி யிருக்கிறதா? எங்களது ஆட்சி யில் தேர்வு எழுதுபவர்களுக்கு புத்தகங்களைக் கொடுத்து விட் டோம். புத்தகத்தை ஏற்கெனவே படித்தவர்களுக்கு மட்டும்தான் விடை எங்கிருக்கிறது என்று தெரியும். தேர்வு நேரம் 3 மணி நேரம்தான் என்பதால் மற்றவர் கள் விடையைத் தேடிக் கொண் டிருப்பதிலேயே நேரம் முடிந்து விடும். எனவே, பெரும்பாலான வர்கள் தேர்வில் தோல்வியடைந்து விடுவார்கள்.

தேர்வில் முறைகேடு என்பது புதிய விஷயம் அல்ல. ஆனால், பெற்றோர் சுவரில் பல்லி மாதிரி ஏறும் படம் ராஷ்ட்ரீய ஜனதா தள ஆட்சியில் வெளிவரவில்லை.

இதுபோன்ற புகைப்படங்கள், பிஹாரின் பட்டப்படிப்பு சான்றிதழ் கள் மீது மக்களுக்கு அவநம்பிக் கையை ஏற்படுத்தி விடும். நீங்கள் (மாணவர்கள்) எங்கு சென்றாலும் உங்களின் கல்வித் தகுதியை நம்ப மாட்டார்கள். தேர்வில் வெற்றி பெற இயலாதவர்களை, தேர்ச்சி அடையும் வரையில் ஏன் தோல்வியடையச் செய்யக் கூடாது?

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புத்தகம் கொடுக்க ஆதரவு

பிஹார் பள்ளித் தேர்வு வாரிய முன்னாள் தலைவர் ராஜ்மணி பிரசாத் கூறும்போது, “தேர்வின்போது மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் முறையை அமல்படுத்த 2 ஆண்டுகளுக்கு முன் நான் பரிந்துரை செய்தேன். வெவ்வெறு விதமான கேள்விகள் அடங்கிய கேள்வித்தாள் முறையை யும் அறிமுகம் செய்தால், புத்தகம் கொடுத்தாலும் மாணவர்களால் குறிப்பிட்ட நேரத்துக்குள் விடை யைக் கண்டுபிடிக்க முடியாது. அவர்களுக்கு அப்பாடத்தில் குறைந்தபட்ச அறிவாவது இருந்தால்தான் விடையளிக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

கலக்கிய புகைப்படம்

பிஹார் மாநில பொதுத்தேர்வில் மாணவர்கள் பார்த்து எழுத பெற்றோரே உதவும் புகைப்படம் உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இம்முறைகேடு இந்த அளவுக்கு வெளியே தெரிய அந்தப் புகைப்படம்தான் காரணம். பிஹார் அரசுக்கு கண்டனங்கள் குவிகின்றன. பாட்னா உயர் நீதிமன்றமும் அரசைக் கண்டித்துள்ளது.

அந்தப் புகைப்படம் இணைய தளங்களிலும் ஊடகங்களிலும் அதிக அளவு பகிரப்பட்டு மிகப் பிரபலமடைந்துள்ளது.

புகழ்பெற்ற அந்த புகைப்படத்தை எடுத்த புகைப்பட நிருபர் ராஜேஷ் குமாரின் பெயர் பெரிய அளவில் வெளியே தெரியவில்லை. அவர் உள்ளூர் இந்திப் பத்திரிகையில் புகைப்பட நிருபராகப் பணியாற்றுகிறார். அவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டி:

எனது புகைப்படம் மிகப் பிரபல மடைந்துவிட்டது. ஆனால் நான் யார் என்பது வெளியில் தெரியவில்லை. நான் அந்தப் புகைப்படத்தை எங்கள் அலுவலகத்துக்கு அனுப்பினேன். அடுத்த நாள் அது பத்திரிகையில் வெளிவந்தது. ஆனால், அதன் பிறகு தேசிய, சர்வதேச ஊடகங் களில் அப்படம் வெளியானதைக் கண்டேன். அதுவும் வெவ்வேறு செய்தி நிறுவனங்களின் பெயர் களுடன் வந்துள்ளது.

நான் என்ன சொல்வது. அடக்கமாகவே உணர்கிறேன், வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. நான் உள்ளூர் அளவிலான செய்தியாளன். ஆனால், எனது புகைப்படம், தேர்வு முறைகேட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தை நிர்பந்தம் செய்திருப்பதை மிகத் திருப்தியாக உணர்கிறேன்.

இப்புகைப்படம் வந்த பிறகு, நான் கேமராவுடன் இருப்பதைப் பார்த்தால் சில சமயம் மக்கள் என்னைத் துரத்தி விடுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஹஜிபூரில் உள்ள அப்பத் திரிகையின் செய்திப்பிரிவின் தலைவர் சைலேஷ் குமார் கூறும்போது, “அந்தப் புகைப்படம் இந்த அளவுக்கு பிரபலமாகும் என எங்களுக்குத் தெரியாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x