Last Updated : 21 Feb, 2015 02:58 PM

 

Published : 21 Feb 2015 02:58 PM
Last Updated : 21 Feb 2015 02:58 PM

முலாயம் பேரன் திருமண விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

சமாஜ்வாதி கட்சித் தலைவரான முலாயம்சிங் யாதவின் பேரனது திருமண விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

முலாயம்சிங்கின் இளைய பேரன் தேஜ் பிரதாப்சிங் யாதவுக்கு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகள் ராஜ லட்சுமியுடன் வரும் 26-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

விழாவின் ஒருபகுதியான மணப்பெண்ணுக்கு திலகம் இடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கலந்து கொண்டார். விழாவுக்காக சுமார் 80,000 சதுர அடியளவில் ஜெர்மனிலிருந்து வரவழைப்பட்டிருந்த தண்ணீர் மற்றும் தீயினால் விபத்து ஏற்படாத பந்தல் அமைக்கப்பட்டு மிக விமர்சிசையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

விழாவுக்கு காலை 10.45 மணியளவில் சிறப்பு விமானத்தில் மோடி வருகை தந்தார். அவரை லாலுவும், முலாயமும் வாசலுக்கு வந்து வரவேற்றுச் சென்றனர். சுமார் 45 நிமிடம் மோடி விழாவில் இருந்தார்.

பாதுகாப்புக்காக 5 உயர்தர சிகிச்சை வசதிகள் கொண்ட ஆம்புலன்சுகள், 500 வாகனங்கள் நிறுத்தப்பட்டன. , 3000-த்துக்கும் மேலான காவல்துறையினரும் 12 ஐ.பி.எஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

முன்னதாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில் இது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி எனப் புகார் கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x