Last Updated : 24 Feb, 2015 09:21 AM

 

Published : 24 Feb 2015 09:21 AM
Last Updated : 24 Feb 2015 09:21 AM

டெல்லி சட்டப்பேரவையின் முதல் கூட்டம்: கேஜ்ரிவால், எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு - சபாநாயகராக ராம் நிவாஸ் கோயல் தேர்வு

டெல்லி சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரி வால், அமைச்சர்கள், அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். ராம் நிவாஸ் கோயல் புதிய சபாநாயகராகவும் வந்தனா குமார் துணை சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மொத்தம் உள்ள 70 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தலில் 67 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி டெல்லியில் அமைந்துள்ளது. இதன் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்களுக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட பத்தே சிங், ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். இதன் பிறகு ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 67 வயது ராம் நிவாஸ் கோயல் புதிய சபாநாயகராகவும், துணை சபாயகராக வந்தனா குமாரும் (41) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

டெல்லியின் ஷாத்ரா தொகுதி யில் பாஜக வேட்பாளர் ஜித்தேந்தர் சிங்கை எதிர்த்து போட்டியிட்டு சுமார் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் கோயல். இவர் மீது கடந்த 7-ம் தேதி, அவரது தொகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கலவரத்தைத் தூண்டியதாக ஒரு வழக்கு பதிவாகி உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் அணிப் பிரிவின் தலைவராக இருந்த வந்தனா, ஷாலிமார் பாக் தொகுதியில் போட்டியிட்டு பாஜகவின் ராகேஷ் குப்தாவை 10,978 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர். இந்தமுறை தேர்ந் தெடுக்கப்பட்ட 7 பெண் எம்எல்ஏக்களும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர் களில் ஒருவருக்குக்கூட கேஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் இடம் அளிக் கப்படாத நிலையில், வந்தனாவுக்கு துணை சபாநாயகராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

டெல்லி சட்டப்பேரவையில் குறைந்தபட்சம் பத்து எம்எல்ஏக் களைக் கொண்ட கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப் படும். ஆனால், ஆம் ஆத்மியைத் தவிர பேரவையில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 3 எம்எல்ஏக்களே உள்ளனர். இதனால் எதிர்கட்சித் தலைவர் நியமனம் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

கடந்த முறை 49 நாட்கள் ஆட்சி செய்த கேஜ்ரிவால், ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இப்போது நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதையடுத்து பெரும்பான்மை பலத்துடன் கேஜ்ரிவால் தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x