Last Updated : 06 Jul, 2019 02:31 PM

 

Published : 06 Jul 2019 02:31 PM
Last Updated : 06 Jul 2019 02:31 PM

பல்வேறு வழக்குகளால் அரசுக்கு ரூ.3.75 லட்சம் கோடி வருவாய் தேக்கம்: மத்திய அரசு தகவல்

சேவைத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலுவையில் உள்ள வழக்குகளால், மத்திய அரசுக்கு ரூ.3.75 லட்சம் கோடி வராமல் தேங்கிக்கிடப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அரசுக்கு வரவேண்டிய வரிவருவாய் ரூ.3.75 கோடி வழக்குகளால் தேக்கமடைந்துள்ள நிலையில் அதை முடிவுக்கு கொண்டுவர பட்ஜெட்டில் " நமது அரசின் சட்டப்பிரச்சினை தீ்ர்வுத் திட்டம், 2019" என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், சட்டப்பிரச்சினையில் இருக்கும் நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு வட்டியும், அபராதமும் தள்ளுபடி செய்யப்பட்டு, முழுமையாக வரியை தாமாக வந்து  செலுத்தும் திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் வரியை தாமாக முன் வந்து செலுத்தும் நிறுவனங்கள், தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.

மேலும், 40 சதவீதம் முதல் 70 சதவீதம்வரை வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கும் நிறுவனங்கள், தனிநபர்கள் ஆகியோருக்கு தனியாக திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.  இந்த திட்டத்தின் கீழ் சேவைவரி, சுங்கவரி மற்றும் உற்பத்தி வரி ஆகியவற்றில் பிரச்சினை, சட்டச்சிக்கல் இருப்பவர்கள் இதில் சேர்ந்து பயன் பெறலாம்.

பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், " ஜிஎஸ்டி அறிமுகம் செய்து 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், ஜிஎஸ்டி அறிமுகத்துக்கு முன், ஏராளமான வரிவசூல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவற்றின் மதிப்பு ரூ3.75லட்சம் கோடி. இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டுவந்து, தொழிலை சுமூகமாக நடத்த வர்த்தகர்களுக்கும், நிறுவனங்களுக்கும் அரசு வாய்ப்பளிக்கிறது.

இதற்காக சட்டச்சிக்கல் தீர்வு திட்டம் என்று மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதில் வர்த்தகர்கள், நிறுவனங்கள் பங்கேற்று, அரசுடன் இருக்கும் சட்டப்பிரச்சினைகள், வழக்குகளை தீர்த்துக்கொள்ளாம்.இவ்வாறு தீர்க்க முன்வருபவர்களுக்கு அபராதம், வட்டி தள்ளுபடி செய்யப்படும், வரி மட்டுமே செலுத்தினால் போதுமானது, சட்டநடவடிக்கை ஏதும் பாயாது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x