Published : 06 Jul 2019 12:51 PM
Last Updated : 06 Jul 2019 12:51 PM

பாஜக உறுப்பினர் சேர்க்கை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பாஜக உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் மோடி வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை கட்சியின் நிறுவனர் சியாம் பிரசாத் முகர்ஜி பிறந்தநாளான 6-ம் தேதி நாடுமுழுவதும் தொடங்குவது என அறிவிக்கப்பட்டது. இதன்படி பாஜக உறுப்பினர் சேர்க்கையை இன்று நாடுமுழுவதும் தொடங்குகிறது. கட்சி மூத்த நிர்வாகிகள் நாட்டின் பல பகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தனர். பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைக்க  பிரதமர் மோடி வாரணாசி வந்தார்.

வாரணாசியில் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘சியாம் பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாள் நமக்கு ஊக்கமளிக்கும் தினம். பாஜகவின் உறுப்பினர் சேர்க்கையை இன்று தொடங்குவோம். இதற்காக காசியில் நடக்கும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன். பலதரப்பட்ட மக்களையும் உறுப்பினராக சேர்ப்பு மூலம் பாஜக குடும்பத்தை வலிமையடைய செய்வோம்’’ என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x