Last Updated : 10 Jul, 2019 08:18 AM

 

Published : 10 Jul 2019 08:18 AM
Last Updated : 10 Jul 2019 08:18 AM

8 எம்எல்ஏக்களின் ராஜினாமா நிராகரிப்பு; கர்நாடக ஆளுநருக்கு சட்டப்பேரவைத் தலைவர் கடிதம்

கர்நாடகாவில் குமாரசாமி தலைமை யிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக ராஜினாமா செய்துள்ள 15 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும்படி காங்கிரஸ் கோரியுள்ளது. இந்நிலையில் ராஜினாமா கடிதங்களை பரிசீலித்த சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் 8 பேரின் கடிதங்களை நிராகரித்துள்ளதால் குழப்பம் நீடிக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஓராண் டாக முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. இதில் அமைச்சரவை யில் வாய்ப்பு கிடைக்காததால் 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதில் காங்கிரஸைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், மஜதவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்தனர்.

இதையடுத்து அதிருப்தி எம்எல்ஏக் களை பாஜக நிர்வாகிகள் தனி விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். அங்கு காங்கிர ஸார் போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று முன்தினம் புனேவுக்கு கொண்டுசெல்லப் பட்டனர். இதனிடையே அதிருப்தியாளர் களை சமாளிக்கும் வகையில், ஒட்டு மொத்தமாக அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளதாக முதல்வர் குமாரசாமி அறிவித்தார். இதற்கு அதி ருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ சோமசேகர், ‘‘நாங்கள் அமைச்சர் பதவி எதிர்பார்க்க வில்லை.பேரவைத் தலைவர் முடிவை அறிவிக்கும் வரையில் பெங்களூரு திரும்ப மாட்டோம்'' என பதிலளித்தார்.

இதனிடையே காங்கிரஸ் பேரவை குழு தலைவர் சித்தராமையா தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்களின் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. அதில் 60-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பங்கேற்று, குமாரசாமி அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித் தனர். பின்னர் சட்டப்பேரவை வளாகத் தில் உள்ள காந்தி சிலையின் முன்பாக அமர்ந்து பாஜகவுக்கு எதிராக தர்ணா வில் ஈடுப‌ட்டனர்.

அப்போது சித்தராமையா பேசுகை யில், ''காங்கிரஸ் எம்எல்ஏகள் தங்களது சொந்த விருப்பப்படி ராஜினாமா செய்ய வில்லை. பாஜகவின் மிரட்டலின் காரண மாகவே ராஜினாமா செய்துள்ளனர். அந்த ராஜினாமா உண்மையானதல்ல. அவர் கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும். கூட்டணி ஆட்சிக்கு குந்தகம் விளை வித்த அதிருப்தி எம்எல்ஏக்கள் திரும்பி வந்தாலும் நிச்சயம் தண்டனை உண்டு.

கடந்த ஓராண்டில் இந்த அரசை கவிழ்க்க பாஜக 6 முறை முயன்றுள்ளது. வழக்கம்போல பாஜகவின் முயற்சி இந்த முறையும் தோல்வி அடையும். கட்சிக்கு விரோதமாக செயல்பட்டுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது சட்டரீதியாக நட வடிக்கை எடுக்கப்படும். அவர்களை தகுதி நீக்கம் செய்யும்படி சட்டப்பேரவை தலைவரிடம் மனு அளித்துள்ளோம். அதில் அவர்களின் ராஜினாமாவை ஏற்க வேண்டாம் எனவும் 6 ஆண்டுகள் தேர்த லில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்'' என்றார்.

ஆளுநருக்கு கடிதம்

அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜி னாமா கடிதங்களை பரிசீலித்த பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் கூறும்போது, ‘‘ரோஷன் பெய்கை தவிர வேறு எந்த எம்எல்ஏவும் என்னை நேரில் சந்திக்க வில்லை. 13 எம்எல்ஏக்கள் தங்க‌ளின் ராஜி னாமா கடிதங்களை எனது அலுவலகத் தில் அளித்துள்ளனர். ராஜினாமா செய்த தாகக் கூறிய மற்ற 2 பேரின் கடிதங்கள் எனக்கு கிடைக்கவில்லை.

இந்த 13 பேரின் ராஜினாமா கடிதங் களை சட்டப்பேரவை செயலரும் நானும் சட்ட விதிமுறைகளின்படி பரிசீலித்தோம். அதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பி.சி.பாட்டீல், பைரத்தி பசவராஜ், முனி ரத்னா உள்ளிட்ட 8 பேரின் கடிதங்கள் முறைப்படி எழுதப்படவில்லை. அதனை ஏற்க முடியாது என நிராகரித்துள்ளேன். ஆனந்த் சிங், ராமலிங்க ரெட்டி, நாரா யண கவுடா உள்ளிட்ட 5 பேரின் ராஜி னாமா கடிதங்கள் முறைப்படி எழுதப்பட் டுள்ளது. எனவே அவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த 5 எம்எல்ஏக்களும் என்னை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கும்படி தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ராஜினாமா கடிதங்கள் நிராகரிக்கப்பட்ட 8 எம்எல் ஏக்களும் என்னை அலுவலகத்தில் நேரில் சந்தித்து, கடிதம் அளித்தால் பரிசீலித்து முடிவெடுப்பேன்.

இதனிடையே காங்கிரஸ், தங்களது அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி அளித்துள்ள மனு குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும். இந்த ராஜினாமா கடிதங்கள் குறித்த எனது நிலைப்பாட்டை விளக்கி ஆளுநர் வாஜு பாய் வாலாவுக்கு கடிதம் அனுப்பியுள் ளேன். நான் அரசியல் விவகாரங்களுக்கு அப்பாற்பட்டவன். அரசியல் சாசனப்படி, எனது கடமையை செய்வேன்''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x