Last Updated : 14 Aug, 2017 03:41 PM

 

Published : 14 Aug 2017 03:41 PM
Last Updated : 14 Aug 2017 03:41 PM

வாழும் நாடுகளை சொந்தவீடாக நினைக்கமுடியாத சீக்கியர்களின் நிலை

ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டை விட்டு வெளியேறும் முன் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து பாகிஸ்தானை பிரித்த போது பாதிப்புக்குள்ளானது இந்துக்களும் முஸ்லிம்களும் மட்டுமல்ல சீக்கியர்களும்தான்.

பிரிவினையின் 70 ஆண்டுகள் கடந்த நிலையில், பாகிஸ்தானிய சீக்கியர்கள், இந்தியாவையோ அல்லது பாகிஸ்தானையோ தங்கள் வீடாக நினைக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

பாகிஸ்தானைச் சேர்ந்த சீக்கிய இளம் தலைமுறையினர் இந்தியாவிற்கு செல்லவும் விரும்பாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்கான பாதுகாப்பையும் நிம்மதியையும் வெளிநாடுகளில் தேடத் தொடங்கியுள்ளனர்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை சீக்கியர்கள் அங்கு சிறுபான்மையினராக உள்ளனர். ஆப்கானிஸ்தானை எல்லையாகக் கொண்டுள்ள பழமை வாய்ந்த வடமேற்கில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒருகாலத்தில் முஸ்லிகளிடையே தங்களுக்கு இருந்த சகோதரத்துவம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.

மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் ஜிகாதிக்கள் சீக்கியர்களுக்கு எதிராகவும் தங்கள் இன மக்களை திசைதிருப்பிவருவதாக பாகிஸ்தானிய சீக்கியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பல நூற்றாண்டுகளாக பாகிஸ்தான் நாட்டுப்புற மனிதர்களோடு நிம்மதியோடுதான் அவர்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள்.

இதற்கிடையில், 1984ல் இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை அவரது சீக்கிய மெய்க்காப்பாளர் படுகொலை செய்தபிறகு, இந்துக்களுடனான உறவுகளும், உடைந்து நொறுங்கியது.

சில பாக்கிஸ்தானிய சீக்கியர்கள், தங்களுக்கு என்று இருந்த இரு நாடுகளிலும் தாங்கள் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும், ஆனால் தற்போது இந்த இருநாடுகளிலும் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளான நிலையில் இளைஞர்கள் இப்பொழுது இந்திய துணைக்கண்டத்திலிருந்தும் விலகிச் செல்ல விரும்புவதாகக் கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட உலகளவில் 27 மில்லியன் சீக்கியர்கள் வாழ்கின்றனர், உலக மக்கள்தொகையில், சீக்கியர்கள் 0.39% உள்ளனர், அவர்களின் 83% பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். இதுதவிர, பாகிஸ்தான், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, மலேசியா, இதாலி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க வகையில் சீக்கியர்கள் பரவியுள்ளனர்.

15ஆம் நூற்றாண்டில் தோன்றிய சீக்கிய மதத்தில் தற்போதைய மக்கள் தொகை 2 கோடிய 50 லட்சம் பேர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை அளித்தவர்களில் பலர் சீக்கியமதத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்திய சுதந்திரத்துக்காக உயிர் இழந்த சீக்கியர்களைவிட இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் உயிரிழந்த சீக்கியர்களின் எண்ணிக்கையே அதிகம் என்பது வேதனையான உண்மை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x