Last Updated : 05 Nov, 2014 10:55 AM

 

Published : 05 Nov 2014 10:55 AM
Last Updated : 05 Nov 2014 10:55 AM

கொல்கத்தாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்

கொல்கத்தா நகரிலும் அதன் துறைமுகப் பகுதி மீதும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 போர்க்கப்பல்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டன.

இந்த தகவலை கொல்கத்தா காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மத்திய உளவு அமைப்புகளின் எச்சரிக் கையை அடுத்து கொல் கத்தா நகரமும் அதன் துறை முகப் பகுதியும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.

துறைமுகப்பகுதி மீது தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டதையடுத்து அங்கிருந்து ஐஎன்எஸ் குக்ரி, ஐஎன்எஸ் சுமித்ரா ஆகிய இரு போர்க்கப்பல்கள் திடீரென நேற்று வெளியேற்றப்பட்டன.

கடற்படை கொண்டாட்டத்தை யொட்டி நவம்பர் 6 வரை இந்த கப்பல்களை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக கப்பல்கள் வெளி யேற்றப்படவில்லை என்று பாது காப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக் கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x