Last Updated : 12 Jul, 2016 09:35 AM

 

Published : 12 Jul 2016 09:35 AM
Last Updated : 12 Jul 2016 09:35 AM

கலவரத்தால் ஜம்மு நெடுஞ்சாலை மூடப்பட்டது: அமர்நாத் யாத்ரிகர்கள் ஸ்ரீநகரில் தவிப்பு

கலவரம் காரணமாக ஜம்மு-நகர் நெடுஞ்சாலை மூடப்பட்டதால் அமர்நாத் யாத்திரை சென்ற நூற்றுக்கணக்கான யாத்ரிகர்கள் ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி உள்ளிட்டோர் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட கலவரம் தொடர்ந்து நீடிப் பதால், நகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நகர் உள்ளிட்ட பல இடங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனால், பல்தால் மார்க்கமாக அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட வர்கள், அங்கிருந்து ஜம்முவுக்கு திரும்ப முடியவில்லை. நூற்றுக் கணக்கான யாத்ரிகர்கள் நகரில் உள்ள சுற்றுலா வரவேற்பு மையத்திலும், கோயில்களிலும் தங்கியிருந்தனர்.

பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த யாத்ரிகர் பிரமோத் குமார் கூறும் போது, ‘ஜூலை 8-ம் தேதி நாங்கள் யாத்திரையை முடித்தோம். ஞாயிற் றுக் கிழமை நள்ளிரவில் முகாமில் இருந்து புறப்படுமாறு கூறினார்கள்.

எங்களை ஜம்முவுக்கு அழைத் துச் செல்ல நகரில் பேருந்து காத்திருப்பதாகக் கூறினர். சுமார் 1 மணிக்கு நகர் வந்தபோது ஒரு பேருந்து கூட இல்லை. ஜம்முவுக்கு எப்படி போவது எனத் தெரியவில்லை’ என்றார். உ.பி.யைச் சேர்ந்த மற்றொரு யாத்ரிகர் பன்சிலால் கூறும்போதும், ‘சரியான தகவலைக் கூட யாரும் கூற மறுக்கின்றனர். வாடகைக்கு வாகனம் எடுக்கவும் வழியில்லை,’ என்றார்.

ஆனால், அமர்நாத் யாத்ரிகர்க ளுக்கு உரிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக, கண்டர் பால் மாவட்ட காவல்துறை துணை ஆணையாளர் தாரிக் ஹுசைன் தெரிவித்தார்.

‘பல்தால் முகாமில் இருந்து 1,612 வாகனங்கள் மூலமும், பாஹல் காம் முகாமில் இருந்து 129 வாக னங்கள் மூலமும் மொத்தம், 25,000 யாத்ரிகர்கள் ஜம்முவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பல்தாலில் இருந்து நகர் செல் லாமல் மாற்று பாதையில் ஜம்மு வுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் சென்றன.

நகரில் தவிக்கும் யாத்ரிகர் களை சில டாக்சி ஓட்டுனர்கள் தவறான தகவல் கொடுத்து ஏமாற்றியிருப்பார்கள். நகரில் பேருந்து காத்திருப்பதாக நாங்கள் எந்த யாத்ரிகருக்கும் தகவல் தெரி விக்கவில்லை’ என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, பல்தால் மற்றும் பாஹல்காம் முகாம்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாத்திரை நேற்று மீண்டும் தொடங்கியது. ‘449 யாத்ரிகர்கள் வான் வழியே தரிசனத்துக்காக சென்றனர். குகைக் கோயிலில் திங்கள்கிழமை அன்று 2,799 யாத்ரிகர்கள் தரிசனம் செய்தனர்’ என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பல்தால் முகாமில் லக்னோவைச் சேர்ந்த அபிஷேக் சவுராசியா (30) மற்றும் குஜராத்தைச் சேர்ந்த நர்மத் அஸ்நாகர் (58) ஆகிய 2 யாத்ரிகர்கள் மாரடைப்பு காரண மாக நேற்று உயிரிழந்தனர். கடந்த ஜூலை 1-ம் தேதியில் இருந்து பல்வேறு காரணங்களால், 8 யாத்ரிகர்கள் உயிரிழந்ததாக அதி காரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x